திரையுலகில் இயல்பான நடிப்பு, யதார்த்தமான குணசித்திர வேடங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தவர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். நகைச்சுவை, உணர்ச்சி, தந்தை கதாபாத்திரம் என எந்த வேடம் கொடுத்தாலும் அதை உயிரோட்டமாக வெளிப்படுத்தும் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

தற்போது திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் அதிகமாக நடித்து வரும் எம்.எஸ்.பாஸ்கர், தனது நடிப்பு திறமைக்காக சமீபத்தில் பெரும் அங்கீகாரத்தையும் பெற்றார். குறிப்பாக, பார்க்கிங் திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பிற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த விருது, பல ஆண்டுகளாக அவர் செய்த கடின உழைப்புக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டாக அமைந்தது.

இந்நிலையில், எம்.எஸ்.பாஸ்கர் தொடர்பான ஒரு நெகிழ்ச்சியான தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரே நாளில் இரண்டு கார்களை வாங்கியுள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தின் புகைப்படங்களை அவரது மகள் ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து, உணர்ச்சிபூர்வமான பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் ஐஸ்வர்யா கூறியதாவது,“வறுமையில் வாடி, வீடு இல்லாமல் வாழ்ந்த நிலையில் இருந்து, இன்று ஒரே நாளில் இரண்டு கார்கள் வாங்கும் நிலைக்கு நாங்கள் வந்தது எளிய விஷயம் இல்லை. இது ஒரு நீண்ட பயணம். கடின உழைப்பாளி அப்பாவுக்கும், சிக்கனமாக செலவு செய்த அம்மாவுக்கும் கிடைத்த வெற்றி இது.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு, பல ரசிகர்களையும் திரையுலக பிரபலங்களையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. எம்.எஸ்.பாஸ்கரின் வாழ்க்கைப் பயணம், சாதாரண நிலையில் இருந்து இன்று தேசிய விருது பெற்ற நடிகராக உயர்ந்திருப்பது, பல இளம் கலைஞர்களுக்கு மிகப் பெரிய ஊக்கமாக பார்க்கப்படுகிறது.
Listen News!