• Dec 17 2025

நடிகைகள் தங்களை தொடாதே என்று சொல்லமாட்டார்கள்... கிச்சா சுதீப்பின் கருத்து படுவைரல்.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பிரபல கன்னட நடிகரும் தேசிய அளவில் அறியப்பட்ட நட்சத்திரமுமான கிச்சா சுதீப் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு கருத்து, சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுதீப் நடிகைகள் குறித்து சில கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். 


“நடிகைகள் என்னை தொடாதே என்று எப்போதும் கூற மாட்டார்கள். அப்படி தொடாதே என்றால் சினிமாத்துறைக்கு வரவே முடியாது.” என அவர் தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தக் கருத்து தொடர்பான செய்தி குறிப்புகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விதமான கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

கிச்சா சுதீப் கன்னட சினிமாவில் மட்டுமல்லாமல், தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்ததன் மூலம் தேசிய அளவில் அறியப்பட்டவர். "நான் ஈ" திரைப்படத்தில் அவரது நடிப்பு, அவருக்கு இந்திய அளவில் பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement