சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், க்ரிஷ் வரைந்த புகைப்படத்தை கிழித்து எரிகின்றார் விஜயா. இதனால் வீட்டில் உள்ளவர்கள் விஜயாவை திட்டுகின்றார்கள். ஆனாலும் விஜயா க்ரிஷை எப்படியாவது வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று ஆவேசப்படுகிறார்.
மேலும் க்ரிஷின் பாட்டி அவரை வேண்டுமென்று தான் இங்கே விட்டுவிட்டு போனதாகவும், இதுவரை ஒரு கால் பண்ணவில்லை என்று சொன்னதும், ரோகிணி ஓடிப்போய் மீனாவுக்கு போன் பண்ணுமாறு தனது அம்மாவுக்கு சொல்லுகின்றார். அதன்படி அவருடைய அம்மாவும் மீனாவுக்கு போன் பண்ணி க்ரிஷ் பற்றி விசாரிக்கின்றார்.
இதைத்தொடர்ந்து சீதாவை சந்தித்த முத்து, க்ரிஷை தத்தெடுப்பதற்கு மீனா ஒத்துக் கொள்ளவில்லை. அதற்கு என்ன காரணம் என்று விசாரித்து சொல்லுமாறு சொல்லுகின்றார்.

அதன்படி அம்மா வீட்டுக்கு வந்த சீதா, மீனாவை அழைத்து என்ன பிரச்சனை என்று கேட்க, அவர் விஜயாவை நினைத்து தான் க்ரிஷை தத்தெடுக்கவில்லை என்று உண்மையை மறைக்கின்றார்.
இன்னொரு பக்கம் முத்து க்ரிஷை தத்தெடுப்பதை தடுப்பதற்கு மகேஸ்வரி வீட்டில் இருந்து பிளான் பண்ணுகின்றார் ரோகிணி . ஆனாலும் வித்யா , மீனா க்ரிஷை தத்து எடுத்தால் நல்லபடியாக அவன் வளருவான், அதனால் அவர்களை தத்தெடுக்க விடுமாறு சொல்லவும், ரோகிணி கையெடுத்து கும்பிட்டு என்னுடைய விஷயத்தில் தலையிடாதே என்று வித்யாவை நிறுத்துகின்றார். இதுதான் இன்றைய எபிசோட் .
Listen News!