பாலிவுட்டில் பிரபல சினிமா நட்சத்திரங்களாக ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதியினர் திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் முதல்முறையாக தங்களுடைய மகள் துவாவின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். துவாவின் புகைப்படம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
தீபிகா படுகோனுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி பெண் குழந்தை பிறந்தது. கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இருவரும் தங்களுடைய மகளின் பெயரை அதிகாரபூர்வமாக துவா படுகோன் சிங் என அறிவித்தனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொண்டாட்டப் புகைப்படங்களை பகிர்ந்த ரன்வீர் தீபிகா தம்பதியினர், தங்களுடைய மகளின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர். துவாவின் புகைப்படத்தை பார்த்த பலரும் அவருடைய மகள் அச்சு அசலாக தீபிகாவை போல இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ரன்வீர் சிங்கின் சிறிய வயது புகைப்படமும், தீபிகாவின் சிறிய வயது புகைப்படத்தையும் தற்போது அவர்களுடைய மகளான துவாவின் சிறிய வயது புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!