விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் நந்தினி, பிரவீன் காந்தி மற்றும் அப்சரா ஆகியோர் வெளியேறி உள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் தற்போது திவாகர், அரோரா , விஜே பார்வதி, கனி,FJ, சபரி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, பிரவீன், சுபிக்ஷா, விக்கல்ஸ் விக்ரம் மற்றும் கலையரசன் ஆகிய 17 பேர் காணப்படுகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு வாரத்தின் ஆரம்பத்திலும் இந்த நிகழ்ச்சியில் இருக்க இவர்களுக்கு தகுதி இல்லை என கூறி, வெளியேற்ற நினைக்கும் இரு நபர்களின் பெயர்களை போட்டியாளர்கள் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டவர்கள் நாமினேஷன் செய்யப்பட்டவர்களாக கருதப்படுவார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் துஷார், ஆதிரை, அரோரா,கானா வினோத், கலையரசன், ரம்யா ஜோ, பிரவீன், சுபிக்ஷா, வியானா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிக வாக்குகளை பெறும் நபர்கள் போட்டியில் தொடரலாம். மக்களிடம் குறைந்த வாக்குகளை பெற்ற நபர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்.
இந்த நிலையில், இறுதியாக வெளியான வோட்டிங் லிஸ்ட் அடிப்படையில் ஆதிரை இறுதி இடத்தில் காணப்படுகின்றார். எனவே அரோராவும் ஆதிரையும் இறுதி நிலையில் காணப்படுவது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனவே இந்த வோட்டிங் மாறுமா? இல்லை இவர்களுள் ஒருவர் வெளியேறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!