• Sep 07 2024

காற்றுக்கென்ன வேலி நாயகிக்கு கிடைத்த அதிஷ்ட்டம்... திரைப்பட வாய்ப்பை தட்டிதூக்கிய பிரியங்கா...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவி காற்றுக்கென்ன வேலி சீரியலில் சூர்யா தர்ஷன் மற்றும் பிரியங்கா இருவரும் ஜோடியாக நடிக்க 2021ம் ஆண்டு இந்த தொடர் ஒளிபரப்பாக தொடங்கியது. பின் நாயகன் சூர்யா வெளியேற அவருக்கு பதில் சுவாமிநாதன் நாயகனாக நடிக்க களமிறங்கினார்.


809 எபிசோடுகளுடன் இந்த தொடர் கடந்த 2023ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.இந்த தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்படும் சின்னத்திரை நாயகியாக மாறியவர் நடிகை பிரியங்கா. சீரியல் முடிந்த பிறகு நிறைய போட்டோ ஷுட் நடத்துவதில் பிஸியாக இருந்தார்.


தற்போது அவர் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளதை தனது இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார். "தூர தீர யான" என்ற கன்னட படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இந்த செய்தி தெரிந்ததும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த திரைப்படம் தொடர்பான அப்டேட் செய்திகள் இனி வரும் காலங்களில் வெளியாகும். 


Advertisement

Advertisement