• Jan 19 2025

கோட் படத்தின் சீக்ரெட் உடைத்த பிரேம்ஜி.. இப்பவே சர்ப்பிரைஸ் ஸ்டார்ட் ஆயிடும் போலயே..!!

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள், ப்ரோமோஷன்களும் சமூக வலைத்தளத்தை தெறிக்க விடுகின்றன. இதனால் விஜயின் ரசிகர்கள் உற்சாக மழையில் நனைந்து உள்ளார்கள்.

வெங்கட் பிரபுவும் தனது ஒட்டுமொத்த உழைப்பையும், திறமையும் இந்த படத்தில் கொட்டியுள்ளார். மேலும் விஜய் கேரியரில் இப்படி ஒரு படமா எனக் வியக்க வைக்கும் அளவுக்கு இந்த படத்தில் அவ்வளவு சஸ்பென்ஸ் காணப்படுகின்றது.

டெக்னிக்கல் லெவலை பார்க்கும்போது பல காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. ஏஐ தொழிநுட்பத்தில் விஜயகாந்த், டீஏஜிங்கில் விஜய் என இந்த படத்தை இப்பவே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துள்ளது. இன்னொரு பக்கம் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானாலும் இந்த பாடல்களை தியேட்டரில் பார்க்கும் போது நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என கூறியுள்ளனர்.

அதிலும் விசில் போடு பாடல் நாம் பார்த்தது போல படத்தில் இருக்காதாம். வேற லெவலில் இருக்கும் அப்போது தியேட்டரில் திருவிழா கோலம் தான் என படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருந்தார்.


இந்த நிலையில் தற்போது பிரேம்ஜி கோட் படம் பற்றி சுவாரஸ்ய தகவல்கள் குறிப்பிட்டுள்ளார். அதாவது கோட் படத்தில்  விஜய்யின் காரின் நம்பர்  CM 2026 என தெரிவித்துள்ளார். இந்த தகவல் இப்போது வைரலாகி வருகின்றது.

தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் விஜய் கட்சியை ஆரம்பித்ததோடு தமது இலக்கு 2026 என தெரிவித்திருந்தார் தற்போது கோட் படத்தில் சிஎம் 2026 என்ற நம்பர் பயன்படுத்தப்பட்டுள்ளமை மிகவும் வியக்கத்தக்க ஒன்றாக காணப்படுகிறது.

Advertisement

Advertisement