• Oct 04 2024

விடாமுயற்சி படம் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த அர்ஜுன்..!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த இரு மாதங்களுக்கு முன்புதான் படத்தின் ஷூட்டிங் அசர்பைஜானில் துவங்கப்பட்டு, தொடர்ந்து ஐதராபாத்திலும் நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் காலை, மாலை என இரு வேலைகளும் மாறி மாறி நடித்து வருகிறார் அஜித்.

இந்த படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதத்திலேயே வெளியானது. ஆனாலும் ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போனது. எனினும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தில் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடத்தப்பட்டது. 

இதனிடையே ஏற்பட்ட நிதி நெருக்கடி, அசர்பைஜானில் ஏற்பட்ட காலச் சூழல் உள்ளிட்ட காரணங்களால் இந்த படத்தின் சூட்டிங் சில மாதங்கள் தடைபட்டன. இதை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடத்தப்பட்டு  நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ள அர்ஜுன் பேட்டி ஒன்றில் கூறுகையில், படத்தை பார்த்தா தான் தன்னுடைய கேரக்டர் அனைவருக்கும் தெரியவரும் மேலும் அஜித் குறித்தும் தன்னுடைய பாராட்டுகளை அர்ஜுன் கூறியுள்ளார்.

மேலும் மங்காத்தா போல இந்த படத்திலும் அர்ஜுன் கேரக்டர் மாஸ் காட்டுமா என்ற கேள்விக்கு, அஜித் எப்போதுமே கிங்கு தான் என்று தன்னுடைய உற்சாகத்தை தெரிவித்துள்ளார் அர்ஜுன்.

லியோ படத்தில் அர்ஜுனது கேரக்டர் அனைவரையும் கவர்ந்த நிலையில், தற்போது விடாமுயற்சி படத்துல மாஸ் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement