• Jan 18 2025

கமல் அழைத்தும் கூட வராத ‘பிரேமலு’ இயக்குனர்.. அடுத்த படம் யாருக்கு தெரியுமா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் அழைப்பு விடுத்தும் கூட ‘பிரேமலு’ பட இயக்குனர் வரவில்லை என்றும் அதற்கு பதிலாக மீண்டும் ‘பிரேமலு’ படத்தின் தயாரிப்பாளருக்கே மீண்டும் ஒரு படத்தை இயக்கி கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

சமீபத்தில் வெளியான ‘பிரேமலு’ என்ற மலையாள திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் டப் செய்து வெளியிட்ட நிலையில் இந்த படம் இரு மாநிலங்களிலும் நல்ல வசூலை வாரி குவித்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 

இந்த நிலையில் தற்கால இளைஞர்களின் வாழ்க்கையை மிகச் சரியாக திரைக்கதை அமைத்த ‘பிரேமலு’ இயக்குனருக்கு தமிழ் திரையுலகில் இருந்து வாய்ப்புகள் குவிந்ததாகவும், குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி தரும்படி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.



ஆனால் எந்த வாய்ப்பையும் அவர் ஏற்றுக் கொள்ளாமல், ‘பிரேமலு’  பட தயாரிப்பாளருக்கு அவர் அடுத்த படத்தை இயக்க இருப்பதாகவும் கிட்டத்தட்ட ‘பிரேமலு’ படத்தில் நடித்த நட்சத்திரங்கள்தான் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ‘I AM காதலன்'  என்ற டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ் திரை உலகில் அவருக்கு கோடி கணக்கில் சம்பளம் கொடுக்க முன்வந்த போதிலும் அதனை அவர் மறுத்துவிட்டு மிகக்குறைந்த சம்பளத்துக்கு மீண்டும் ‘பிரேமலு’ தயாரிப்பாளருக்கு படத்தை இயக்க ஒப்புக்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement