பிக்பாஸ் சீசன் 9 நாளுக்கு நாள் ரசிகர்களிடம் வேறலெவல் ஹைபை ஏற்படுத்தி வருகிறது. எப்போதும் போலவே, இந்த சீசனும் புதிய போட்டியாளர்கள், புதிய சண்டைகள், நெருக்கங்கள், போட்டிகள், டாஸ்க்குகள் என பல பரிமாணங்களை கொண்டு வருகிறது. ஆனால் தற்பொழுது வீட்டுக்குள் அனைவரையும் கவர்ந்தவர் இயக்குனர் பிரவீன் காந்தி.

அவர் நடத்திய “லவ் டிராமா ஸ்கிரிப்ட்” பற்றிய பேச்சு தற்போது சோஷியல் மீடியாவை ஆடவைத்து வருகிறது. "இந்த சீசன் பெருசா போகணும்னா, நீயும் நானும் லவ் பண்ணனும்!" என்று கதைத்த அவரது உரை தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
பிரவீன் காந்தி, தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர். அத்தகைய இயக்குநர் பிக்பாஸ் வீட்டிற்குள் அரோராவுடன் கதைத்த உரை தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதன்போது பிரவீன் காந்தி, "இந்த சீசன் பெருசா போகணும்னா... நீயும் நானும் லவ் பண்ணனும்... அதுவும் நான் உன்ன லவ் பண்ண கூடாது. நீ என்ன வெறித்தனமா லவ் பண்ணனும்... நான் வேணாம், புரிஞ்சிக்கனு உன்ன கண்டுக்கவே கூடாது... அப்படி பண்ணா இந்த சீசன் TRP எகிறிடும்!" என்று தெரிவித்துள்ளார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அவரு எடுத்த ரட்சகன் படத்தை மனசுல நினைச்சுகிட்டு அரோரா கிட்ட நூல் விட்டுக்கொண்டு இருக்காரு என கூறுகின்றனர்.
Listen News!