• Jan 18 2025

பிரதீப்பும் நானும் நல்ல Sync-ல இருப்போம்.."இது மட்டும் தான் அவரோட குறை- விஜய் வர்மா சொன்ன முக்கிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் வீட்டில் இரவு நேரங்களில் திடீரென எழுந்து கொண்டு பெண் போட்டியாளர்கள் படுத்திருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார் பிரதீப் ஆண்டனி என்றும், டாய்லெட் போகும்போது கதவை சாத்தாமல் போகிறார் என்றும், போட்டியாளர்கள் பற்றியும் அவர்களது பெற்றோர்கள் பற்றியும் ஆபாசமாக பேசியது, 

பெண் போட்டியாளர்களுடன் லவ் கன்டன்ட் தருகிறேன் என எல்லை மீறியது என ஏகப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட பிரதீப் ஆண்டனியை சனிக்கிழமை எபிசோடில் கமல்ஹாசன் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பியுள்ளார்.


பிரதீப் ஆண்டனியை பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியே அனுப்பியதற்கு எதிராக ஏகப்பட்ட ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர் கவின், சினேகன் உள்ளிட்ட முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கமல் செய்தது தவறு என்றும், அவரிடத்தில் ஏகப்பட்ட பெண்கள் எப்படி எல்லாம் பாதுகாப்பாக இருந்தனர் என்பது எங்களுக்குத் தெரியும் என பிரதீப் ஆண்டனியின் பி ஆர் டீம் கமலுக்கு எதிரான கண்டனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.


அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 இல் முக்கிய போட்டியாளரா இருந்த விஜய் வர்மா அளித்த பேட்டி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதில்,பிரதீப்புக்கும் எனக்கும் நல்ல சிங் இருக்கு, சொல்லிட்டே இருப்பாரு மச்சான் நாம வெளில போய் பார்த்துக்கலாம் என்பாரு, சில டைம் கோபப்படுவாரு, அதனால தான் வார்த்தைகளை விட்டிடுவாரு என்று சொல்லி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement