• Jan 19 2025

6 படங்களில் ‘பேச்சி’ மட்டுமே லாபம்.. நஷ்டத்தில் விஜய் ஆண்டனி படம்.. வசூல் விபரம்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

கடந்த வெள்ளிக்கிழமை விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ உள்பட ஆறு படங்கள் வெளியான நிலையில் இதில் சின்ன பட்ஜெட் படமான ‘பேச்சி’ மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துள்ளதாகவும் மற்ற படங்கள் அனைத்தும் கையை கடித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை ’மழை பிடிக்காத மனிதன்’ ’வாஸ்கோடகாமா’ ‘பேச்சி’ 'நண்பன் ஒருவன் வந்த பிறகு’ ’ஜமா’ ’போட்’ ஆகிய ஆறு படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் இந்த ஆறு படங்களின் வசூல் குறித்து தற்போது பார்ப்போம்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான விஜய் ஆண்டனியின் ’மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே ஒரு நிமிட காட்சி வெளியானதாக சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இந்த படம் ஐந்து நாட்களில் சேர்ந்து 2.19 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டில் ஐந்தில் ஒரு பங்கு கூட இதுவரை வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்த ’போட்’ திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் இந்த படம் ஐந்து நாட்களில் 1.16 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. இது யோகி பாபு சம்பளத்துக்கு மட்டுமே சரியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



கூத்து கலைஞர்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட ’ஜமா’ திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் ஐந்து நாட்களில் வெறும் 8 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்து உள்ளது.

வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவான ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படம் சுமாரான விமர்சனத்தை பெற்ற நிலையில் இந்த படம் ஐந்து நாட்களில் 38 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.

வனப்பகுதிக்குள் சென்ற நண்பர்கள் பேயிடம் மாட்டிக் கொள்ளும் திரில் படமான ‘பேச்சி’ திரைப்படம் இதுவரை 59 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் இந்த ஒரு படம் மட்டுமே பட்ஜெட்டை விட அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நகுல் நடிப்பில் வெளியான ’வாஸ்கோடகாமா’ எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான நிலையில் இந்த படம் வெறும் 18 லட்ச ரூபாய் மட்டுமே ஐந்து நாட்களில் வசூல் செய்துள்ளது.

கடந்த வாரம் வெளியான ஆறு படங்களில் மிகவும் மோசமான தோல்வியை விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ பெற்றுள்ளதாகவும் ‘பேச்சி’ படம் மட்டுமே தயாரிப்பாளருக்கு ஓரளவு லாபத்தை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement