• Jan 19 2025

முத்துவுக்கு தெரியவந்த உண்மை.. மனோஜுக்கு அடித்த ஜாக்பாட்..! பல்பு வாங்கிய விஜயா

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், சீதா டிகிரி வாங்கப்போற சந்தோஷத்தை அண்ணாமலையிடம் சொல்ல அவரும் சந்தோஷப்படுகிறார். அந்த இடத்திற்கு வந்த விஜயா இது பெரிய விஷயமா என சொல்லி கதைக்க, அங்கு வந்த ரோகினி, ஸ்ருதி, ரவி எல்லாரும் இது ரொம்ப பெரிய விஷயம் தானே என பாராட்டுகின்றார்கள்.

மேலும் ரவி இன்றைக்கு நான் பிரியாணி செய்து கொடுக்கப் போகிறேன் என சொல்ல, ஸ்ருதியும் தான் சீதாவுக்கு கிப்ட் வாங்கி கொடுப்பதாக சொல்கின்றார். இதனால் இதெல்லாம் எதற்கு அவ  கலெக்டராவா ஆகிட்டா என விஜயா கேட்க, நீங்க டிகிரி வாங்கி இருந்தா அந்த பீலிங் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என ஸ்ருதி  பல்பு கொடுக்கின்றார்.

இதை தொடர்ந்து சீதாவுக்கு அயலவர்கள் பட்டமளிப்பு விழாவின் போது போட்டுக்களும் டிரஸ்சை கொடுத்து அழகு பார்க்கின்றார்கள். இதைத்தொடர்ந்து ஒவ்வொருவரும் சீதாவுடன் நின்று ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருக்க அந்த இடத்திற்கு முத்து, மீனா வந்து ஸ்வீட் கொடுக்கின்றார்கள்.


அதன் பின்பு சீதா இது எல்லாம் உன்னால தான் என்று மீனாவை பாராட்டியதோடு மட்டுமில்லாமல், அக்கா எப்பவுமே ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸ் பண்ணுவா எங்களுக்காக தான் படிப்ப விட்டுட்டா என்று முத்துவுக்கு சொல்லி கவலைப்படுகின்றார் சீதா.

இதை அடுத்து ரோகினி கடையில் இருந்து கணக்கு பார்த்துக் கொண்டிருக்க, மனோஜ் மாதம் 30 ஆயிரத்திற்கு வெளியே சாப்பிடுவதை கட்டுப்படுத்துமாறு சொல்லுகின்றார். அந்த நேரத்தில் பேங்கில் இருந்து வந்த மேனேஜர் ஒருவர் மனோஜ்க்கு பத்து லட்சம் ரூபாய்க்கு கிரெடிட் கார்ட் வந்திருப்பதாக சொல்ல இருவரும் சந்தோஷப்படுகிறார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement