• Aug 18 2025

இனிதான் கச்சேரி ஆரம்பம்.. பாக்கியாவுக்கு கோபி போட்ட ஸ்கெட்ச்! வருத்தத்தில் எழில்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாக்கியா வீட்டில் இனியா எடுத்த விபரீத முடிவு பற்றி பழனிச்சாமியிடம் சொல்லுகின்றார். பழனிச்சாமி அவருக்கு ஆறுதல் சொல்லி இனிமேல் இனியா இப்படி பண்ண மாட்டார் என நம்பிக்கை கொடுக்கின்றார்.

இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த எழில் சோகமாக இருக்க ராமமூர்த்தி என்ன நடந்தது என்று கேட்கின்றார். அப்போது அவர்  ப்ரொடியூசரை பார்க்கவில்லை கதை சொல்லவில்லை என சொல்லி கவலைப்பட்டுக் கொண்டிருக்க, அங்கு வந்த ஈஸ்வரி இவற்றையெல்லாம் விட்டுவிட்டு நல்ல வேலை பார்க்குமாறும் குழந்தை பெற்றுக் கொள்ளுமாறும் சொல்கின்றார். இதனால் எதுவுமே பேசாமல் எழுந்து சென்று விடுகின்றார் எழில் .

அதன் பின்பு அமிர்தா அங்கே சென்று எழிலுக்கு ஆறுதல்  கூறியதோடு எல்லாம் என்னால தானே ஏற்கனவே பார்த்த பொண்ணை கல்யாணம் செய்து இருந்தால்  இந்நேரம் சந்தோஷமா டைரக்டர் ஆகியிருப்பீங்க என சொல்ல, டைரக்டர் ஆகியிருப்பன் ஆனால் வாழ்க்கைல சந்தோஷமாக இருந்து இருக்க  மாட்டேன். எனக்கு நம்பிக்கை இருக்கு கட்டாயம் நான் டைரக்டர் ஆவேன் என அமிர்தாவுக்கு நம்பிக்கை கொடுக்கின்றார்.


இதை தொடர்ந்து கோபி தனது நண்பருடன் குடித்துக் கொண்டிருக்க அங்கு கோபியின் நண்பரின் நண்பன் வருகின்றார். அவர்தான் பாக்யாவுக்கு ரெஸ்டாரன்ட் கொடுத்ததை அறிந்த கோபி, அவரிடம் மீண்டும் அந்த ரெஸ்டாரண்டை நீங்களே மீண்டும் எடுக்கலாமே என்று கதை விடுகின்றார். 

மேலும் அவர் தனக்கு ஐடியா இல்லை. அந்த லேடி நல்லா தான் நடத்துறாங்க என்று சொன்னதும், அவருடைய போன் நம்பரை வாங்கிவிட்டு அனுப்புகின்றார். மேலும் தனது வாழ்க்கையை கெடுத்த பாக்கியாவின் பிசினஸை கெடுப்பேன் என சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement