தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா நடிப்பில், சுதா கொங்கார இயக்கத்தில் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் பராசக்தி.
இந்தப் படம் முழுவதையும் சிவகார்த்திகேயன் தாங்கி செல்லுகின்றார். அவருடைய நடிப்பு பெரிய பலமாக காணப்படுகின்றது. மேலும் ரவி மோகனும் தன்னுடைய கேரக்டரில் ஸ்கோர் செய்துள்ளார். அதேபோல அதர்வா, ஸ்ரீலிலா இருவரும் தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்த படத்திற்கு தற்போது நெகட்டிவ், பாசிட்டி விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ரவி மோகனின் நெருங்கிய தோழியான கெனிஷா கூட பராசக்தி திரைப்படம் ரவி மோகனுக்காக உருவாக்கப்பட்டதாகவே காணப்படுகிறது. அந்தப் படத்தில் அவர் இல்லை என்றால் படத்தில் சுவாரஸ்யமே இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்தி தீர்ப்புக்கு எதிராக மாணவர் சமூகம் நடத்திய போராட்டத்தை மையமாகக் கொண்டே பராசக்தி திரைப்படம் உருவானது. இந்த படம் பலரையும் உணர்ச்சிபூர்வமாக ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
இந்த நிலையில், பராசக்தி படத்தை சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையிலும், இந்த படத்திற்கான காட்சிகள் படம் வெளியான முதல் நாளிலேயே இணையத்தில் கசிந்துள்ளது. தற்போது இந்த தகவல் படக் குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Listen News!