பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டது மிகவும் தவறு, இந்த நிகழ்ச்சியின் அடிப்படையிலேயே பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும், இந்த நிகழ்ச்சியால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, வேலை என்பன பாதிக்கப்பட்டுள்ளன என நந்தினி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
மேலும் இது பொழுது போக்கு நிகழ்ச்சி, அது மக்களுக்கு மன அமைதியை கொடுக்க வேண்டும். ஆனால் இதை பார்த்தால் மக்களின் மன அமைதி சீர்கெடும்.
அதேபோல பார்வதி இல்லை என்றால் இந்த சீசன் இல்லை. ஒரு சுவாரசியம் இல்லை. அவர் தான் இந்த சீசனை தாங்கி பிடித்தார். ஆனால் அவர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. இதனால் அவர்களுடைய வாழ்க்கையே இல்லாமல் போய்விட்டது என்றார்.

இந்த நிலையில் , பார்வதி கமருதீனுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட போதும் அவர்களுக்கு ரகசியமாக சம்பளம் கொடுக்கலாம் என்று கூறியுள்ளார் நந்தினி. அதாவது பிக் பாஸ் அக்ரிமெண்டின் படி ரெட்கார்ட் கொடுக்கப்பட்டால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது.
ஆனாலும் பார்வதி ஸ்ட்ராங்கான பிளேயர். அவர் சும்மா விட மாட்டார். எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த நேரத்தில் பராசக்தி படத்தின் ஆடியோ ரிலீஸ், ஜனநாயகன் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆகியவை பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. எனவே அவர்கள் டிஆர்பி ஏற்றுவதற்காகவே ரெட் கார்ட் கொடுக்கிற மாதிரி கொடுத்து, அவர்களுக்கு சம்பளம் தரப்படும் என சொல்லியும் அனுப்பி இருக்கலாம்.
இது முழுக்க முழுக்க டிஆர்பிக்காக செய்த நாடகமாக இருக்கும். பார்வதியை வைத்து அவர்கள் நன்றாக உழைத்து விட்டார்கள் என நந்தினி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!