பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், வெளியில் சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து தங்களுடைய வன்மத்தை தீர்த்து வருகின்றனர்.
அதன்படி மீண்டும் பிக் பாஸ் வந்த ரம்யா ஜோ, வியானா ஆகியோர் சாண்ட்ராவையும் விக்ரமையும் வறுத்து எடுத்து வருகின்றனர். தற்போது பைனலிஸ்ட் ஆக விக்ரம், சபரி, வினோத், அரோரா, திவ்யா மற்றும் சாண்ட்ரா என ஆறு போட்டியாளர்கள் காணப்பட்டனர்.
இறுதியாக இடம்பெற்ற பணப்பெட்டி டாஸ்கில் கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறி இருந்தார். அவர் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெறுவார் என பலரும் நினைத்த நிலையில் தனது குடும்பத்திற்காக பணப்பெட்டியுடன் வெளியே வந்ததாக உருக்கமாக தெரிவித்து இருந்தார்.

மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் நபராக வந்த வியானா வந்ததுமே சாண்ட்ராவை அடுத்தடுத்து பல கேள்விகளை கேட்டார். அதற்கு காரணம் சான்ட்ரா முன்னாடி ஒன்று பேசுவதும், பின்னாடி ஒன்று பேசுவதும் தான். அவர் அழுது அழுது பல விஷயங்களை சாதித்து விட்டார்.
இந்த நிலையில், இந்த வாரம் சாண்ட்ரா எலிமினேட் ஆகி வெளியாகி உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே இறுதியாக சபரி, திவ்யா, விக்ரம், அரோரா ஆகியோர்கள் பைனலிஸ்ட்க்கு முன்னேறி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!