சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர்வரும் பொங்கல் தினத்தன்று ரிலீஸுக்கு தயாராக உள்ள திரைப்படம் தான் பராசக்தி. இந்தப் படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப காலகட்டத்தில் காமெடியனாக இருந்த சிவகார்த்திகேயன், தனது கடின முயற்சியினால் படிப்படியாக முன்னேறி இன்று தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வருகின்றார். அமரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவருடைய மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது.
ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மாணவர்களின் போராட்டத்தை மையக் கதையாக வைத்தே பராசக்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இந்த படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பேச்சுக்கள் இப்போதே எழுந்திருக்கின்றன.

மேலும் பராசக்தி படம் பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆக உள்ளது. அந்த தினத்தில் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாக உள்ள ஜனநாயகன் படமும் ரிலீஸ் ஆக உள்ளது . ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு தினத்தில் தன்னுடைய படத்தையும் ரிலீஸ் பண்ண வேண்டும் என்று சிவகார்த்திகேயன் வற்புறுத்தியதாலே அந்த படத்தை பொங்கல் தினத்தன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டதாக பேச்சுக்கள் அடிபட்டன.
இந்த நிலையில், பராசக்தி படத்தின் ஆடியோ லான்ச் மிகப்பெரிய அளவில் செய்யப்பட உள்ளதாகவும், அதற்கு ரஜினி, கமல் அழைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், முதலில் நேரு மைதானத்தை அணுகியதாகவும் அங்கு வேறு நிகழ்ச்சி நடப்பதால் அனுமதி கிடைக்கவில்லை என்றும் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.
Listen News!