• Dec 29 2025

விஜயகாந்த் எப்படிப்பட்டவர் என்று மதுரையில தான் தெரிஞ்சிச்சு.! பிரபல நடிகை நேரடிக் கருத்து

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகர் விஜயகாந்த் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். திரையுலகில் பெரும் வெற்றி, ரசிகர்களிடையே நிலைத்த புகழ், ஆகிய அனைத்தும் அவரை தனித்துவமாக்குகின்றன. இதற்கான ஒரு உண்மையான சான்று, சமீபத்தில் நடிகை சிவரஞ்சனி வழங்கிய பேட்டியின் மூலம் அறியமுடிகிறது.


நடிகை சிவரஞ்சனி சமீபத்தில் அளித்த பேட்டியில்," விஜயகாந்த் சார் கூட நடிக்கிற வரை அவர் எப்படிப்பட்ட நபர்னு எனக்குத் தெரியாது. அவருடைய மரியாதை என்னென்னு மதுரைக்கு ஷூட்டிங் போனப்ப தான் தெரிஞ்சுகிட்டேன். அவருக்கு அங்க எவ்ளோ கெளரவம் இருக்குன்னு அந்த ஊருக்கு போனாலே தெரியும். ஷூட்டிங்கிற்கு போனாலே அவரை எப்புடி வரவேற்பாங்க." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தக் கருத்து, பெரிய நடிகர் என்றால் அவர் திரையில் மட்டுமே பிரபலமாக இல்லாது off-screen வாழ்க்கையிலும் பண்பும் மரியாதையுமுள்ளார் என்பதை உணர்த்துகிறது. 

விஜயகாந்த் நடித்த பல திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்னும் நினைவிலிருக்கிறது. அவரது, கதாபாத்திரங்கள், மற்றும் திரையில் வெளிப்படும் அவருடைய ஆற்றல், திரைப்படத்தை மேலும் சிறப்பாக்குகின்றன. ஆனால், off-screen அனுபவம் தான் அவரை உண்மையில் வித்தியாசமான நபராக காட்டுகிறது.

Advertisement

Advertisement