• Apr 17 2026

மயிலுக்கு டிவோர்ஸ் கொடுக்கும் சரவணன்.. செய்வதறியாது தவிக்கும் மயில்.! பரபரப்பான திருப்பம்

shali / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்பொழுது பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்த சீரியலின் புதிய ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. 


அதில், மயில் பாண்டியன் வீட்டுக்கு வெளியே நின்று அத்த என்ன வீட்டுக்குள்ள சேர்க்கல என்றால் நான் வீட்டு வாசலை விட்டு போகமாட்டேன் என்கிறார். அதைக் கேட்ட கோமதி வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்லி கதவை கோபமாக மூடுறார். 

அதனை அடுத்து கோமதி மயில் அம்மாவுக்கு போன் எடுத்து உங்க பொண்ணு எங்க வீட்டு முன்னாடி ஒப்பாரி வைச்சுக் கொண்டிருக்கிறாள் அவளை முதல் இங்க இருந்து கூட்டிக்கொண்டு போங்க என்கிறார். பின் வீட்டுக்கு வந்த மயிலோட அம்மா என்ர பொண்ணை வீட்டை விட்டுத் துரத்தின நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா என்று கேட்கிறார். 


அதைக் கேட்ட சரவணன் வீட்டுக்கு முன்னாடி வந்து எல்லாரும் நடிச்சுக் கொண்டிருக்கீங்களா.? எனக்கு இவள் வேணாம் டிவோர்ஸ் வாங்கி கொடுத்திடுங்க என்கிறார். சரவணனின் வார்த்தையைக் கேட்ட மயில் ஷாக் ஆகுறார். இதுதான் இனி நிகழவிருப்பது... 

Advertisement

Advertisement