• Sep 10 2024

பணத்தை அள்ளி கொடுத்த பாண்டியன்.. மீனா, ராஜி ஆச்சரியம்..தங்கமயில் அட்ராசிட்டி..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியலில் மீனாவின் அப்பாவிடம் சவால் விடும் செந்தில் காட்சியோடு இன்றைய எபிசோடு தொடங்குகிறது. நானும் கவர்மெண்ட் வேலை வாங்கி காட்டுகிறேன், உங்கள் முன் மாப்பிள்ளையாக கெத்தாக நிற்பேன், நீங்களே என்னை மாப்பிள்ளை என கூப்பிடுவீர்கள் என்று சொல்ல அதை கண்டுகொள்ளாத மீனாவின் அப்பா, ’போடா போக்கத்தவனே’ என்று சொல்லி செல்கிறார்.

இந்த நிலையில் செந்தில் ஆவேசமாக பேசியதை வீடியோ எடுத்த கதிர் அதை மீனாவிடம் காட்டிய போது மீனா ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். நான் கூட சும்மா விளையாட்டுக்கு தான் கவர்மெண்ட் வேலைக்கு செல்ல போகிறேன் என்று சொன்னார் என்று நினைத்தேன், ஆனால் என் மீது இவ்வளவு பிரியம் வைத்திருக்கிறார்’ என்று மீனா நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்.

இதனை அடுத்து சரவணன் மற்றும் தங்கமயில் ஆகிய இருவரும் சென்னைக்கு கிளம்பி கொண்டு இருக்கின்றனர். அப்போது தங்கமயில் ஒரு பெரிய பெட்டியை தூக்கிக் கொண்டு வர அனைவரும் ஆச்சரியம் அடைகிறார்கள். மூன்று நாளைக்கு எதற்கு இவ்வளவு பெரிய பெட்டி என்று கூற, வித விதமாக சேலை மாற்றுவதற்காக வைத்திருக்கிறேன் என்று தங்கமயிலின் அட்ராசிட்டியை அனைவரும் கேலியாக பார்க்கின்றனர்.



அப்போது அங்கு வரும் தங்கமயில் அம்மா பாக்கியம், ’நான் சரி செய்து வருகிறேன்’ என்று அவரை தனியாக அழைத்து செல்கிறார். அப்போது தங்க மயிலை திட்டி இவ்வளவு பெரிய பெட்டியை எடுத்துக்கொண்டா செல்வது? என்று கூறுகிறார். இதனை அடுத்து அவர் ’இதுதான் உனக்கு கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பம், இதை பயன்படுத்தி உன் கணவரை உன் கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும், அவருக்கு இனிமேல் அப்பா, அண்ணன் ஞாபகமே வரக்கூடாது, உன்னுடைய ஞாபகம் மட்டுமே வர வேண்டும், நீ என்ன தலையணை மந்திரம் போடுவியோ எனக்கு தெரியாது, மாப்பிள்ளை திரும்பி வரும்போது வேறொரு ஆளாக வரவேண்டும்’ என்று கூறுகிறார். அதற்கு தங்கமயில் தலையை தலையை ஆட்டுகிறார்.

இந்த நிலையில் சரவணன் இடம் தங்கமயில் என்ன கேட்டாலும் வாங்கி கொடு என்று  பாண்டியன்  பணத்தை அள்ளி கொடுக்கிறார். அதை பார்த்து மீனாவும் ராஜியும் ஆச்சரியப்படுவதோடு இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement