• Oct 13 2024

சிங்கள பாடலை சுட்டு தான் ’சுட்டாமல்லே’ பாடல்? அனிருத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஜான்வி கபூர் நடித்த ’தேவாரா’ என்ற படத்தின் பாடல் நேற்று வெளியான நிலையில் இந்த பாடல் சிங்கள பாடலின் காப்பி என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் ’தேவாரா’ என்ற படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பாக இந்த படத்தில் தான் முதல் முதலாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கம்போஸ் செய்த ’சுட்டாமல்லே’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், யூடியூபில் 33 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் இந்த பாடல் சிங்கள பாடலான ’மனிகே மகே ஹிதே’ என்ற பாடலின் காப்பி என்று நெட்டிசன்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடல்  யூடியூபில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்றும் இந்த பாடலுக்கு சமத் சங்கீத் என்பவர் இசையமைத்திருந்தார் என்பதும் கூறப்படுகிறது.


இந்த பாடலை காப்பியடித்து தான் ’தேவாரா’ படத்தின் ’சுட்டாமல்லே’ பாடலை அனிருத் கம்போஸ் செய்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் அனிருத்தை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அனிருத் தரப்பிலிருந்து என்ன விளக்கம் அளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement