• Nov 14 2024

இன்னும் 20 சதவீதம் கூட டிக்கெட் புக்கிங் ஆகல.? 2000 கோடிக்கு நாமமா? திணறும் கங்குவா

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான சூரைப்போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் செம ஹிட் அடித்தன. அதேபோல விக்ரம் படத்தில் அவர் கடைசியாக நடித்த ரோலக்ஸ் கேரக்டர் ரசிகர்களை கவர்ந்தது.

இதை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றார் சூர்யா. மேலும் இதில் பாலிவுட் நடிகர்களான பாபி தியோல், திஷா பதானி ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

d_i_a

கங்குவா திரைப்படம் சுமார் 11 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகும் எனவும், இதன் வசூல் 2000 கோடிகளை தாண்டும் எனவும் இந்த படத்தின் தயாரிப்பாளர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு காணப்படுகிறது .


இந்த நிலையில், கங்குவா படத்திற்கு மல்டி ஃப்ளக்ஸ் திரையரங்குகளிலும் தற்போது புக்கிங் தொடங்கியுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 11.45 வரை படம் திரையிடப்படும் என லிஸ்ட் போடப்பட்டுள்ளது. மேலும் பெரும்பான்மையான திரையரங்குகளில் 95 சதவீதமான டிக்கெட் முதல் நாளிலேயே புக்கிங் ஆகியுள்ளது.

ஆனாலும் தமிழ்நாட்டை தவிர வெளிமாநிலங்களில் கங்குவா  படத்தின் காட்சிகளுக்கு இன்னும் 20% கூட டிக்கெட்டுகள் புக் ஆகவில்லையாம். நாளை படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதற்கு இடையில் டிக்கெட் புக்கிங் ஆகிவிடும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement