• Oct 09 2024

நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் பெஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்- வைரலாகும் வீடியோ

stella / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா திரைப்படங்கள் ஒரு பக்கம், பிஸ்னஸ் ஒரு பக்கம் என கலக்கி வருகிறார். சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தில் நடித்து பாலிவுட்டில் ரசிகர்களை சம்பாதித்துவிட்டார், இந்த படத்தை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ஹிந்தி படத்திலும் ஒப்பந்தமாகயிருக்கிறாராம். இதற்கு சம்பளமாக ரூ.13 கோடி கேட்டுள்ளாராம். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

சினிமாவில் கலக்கி வந்தாலும், பிஸ்னஸ் குறித்த அப்டேட்களையும் தொடர்ந்து செய்து வருகிறார். சமீபத்தில் 9 ஸ்கின் கேர் என்ற ஸ்கின் கேர் பிராண்டை நயன்தாரா அறிமுகப்படுத்தினார். தற்போது ஃபெமி9  என்ற சானிட்டரி நாப்கின் பிராண்டையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

 ஏற்கனவே லிப் பாம் கம்பேனி என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும் ஆர்கானிக் உணவு பொருட்களிலும் முதலீடு செய்திருக்கிறார்.இது ஒரு புறம் இருக்க இவரது நடிப்பில் உருவாகியுள்ள 75வது படம் தான் ‘அன்னபூரணி. இத்திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்த படத்தில், இடம்பெற்றுள்ள 'உலகை வெல்ல போகிறேன்' என்கிற முதல் சிங்கிள் பாடலை படக்குழு, நயன்தாராவின் பிறந்தநாளான இன்று வெளியிட்டுள்ளது.இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement