• Jan 19 2025

மைனா நந்தினி கணவரை நடுரோட்டில் அடித்து நொறுக்கிய கும்பல்.. அதிர்ச்சி வீடியோ..

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை மைனா நந்தினி கணவரை ரவுடி கும்பல்  நடுரோட்டில் அடித்து நொறுக்கிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி’ உள்பட ஒரு சில சீரியல்களிலும் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர் மைனா நந்தினி என்பதும் அவரது கணவர் யோகேஸ்வரனும் சேர்ந்து கூட சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ’விக்ரம்’ ’அரண்மனை 3’ ‘விருமன்’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் மைனா நந்தினி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மைனா நந்தினி இன்ஸ்டாவில் 7 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள நிலையில் அவ்வப்போது குடும்ப புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார் என்பது தெரிந்தது.

அந்த வகையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு கும்பல் தங்கள் காரைச் சுற்றி வழிமறித்து பிரச்சனை செய்ததும் ஒரு கட்டத்தில் மைனா நந்தினி கணவரை எல்லோரும் சேர்ந்து அடிப்பது போன்ற காட்சியும் உள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மைனா நந்தினி கார் உரசியதாக கூறப்பட்ட நிலையில் தான் இந்த சண்டை வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மைனா நந்தினி இதனால் அச்சத்தில் இருந்த நிலையில் திடீரென அந்த கும்பலில் இருந்த ஒருவர் ’ஹாப்பி பர்த்டே’ என்று கூறி இது ஒரு பிராங்க் என்று கூறியதை அடுத்து, ‘இப்படியா செய்வீர்கள்’ என்று மைனா சிரித்துக்கொண்டே அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ’எனக்கும் எனது கணவர் யோகேஸ்வரனுக்கும் இது எதிர்பாராத சர்ப்ரைஸ்’ என்றும் ’என்னடா பண்ணி வச்சிருக்கீங்க’ என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



Advertisement

Advertisement