• Jan 19 2025

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. சினிமா ஒளிப்பதிவாளர் தான் மாப்பிள்ளை..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

பிரபல தமிழ் நடிகை சினிமா ஒளிப்பதிவாளரை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மீரா வாசுதேவன். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார் என்பதும் ’உன்னை சரணடைந்தேன்’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதன் பிறகு ’அறிவுமணி’ ’ஜெர்ரி’ ’கத்திக்கப்பல்’ ’ஆட்டநாயகன்’ ’குமரிப்பெண்ணின் உள்ளத்திலே’ ’அடங்கமறு’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார்

நடிகை மீரா வாசுதேவன் கடந்த 2005 ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்த நிலையில் 5 ஆண்டுகளில் இந்த திருமணம் முடிவுக்கு வந்தது. இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

இதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு நடிகை மீரா வாசுதேவன் மலையாள நடிகர் ஜான் கொகைன் என்பவரை திருமணம் செய்த நிலையில் 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.



 இந்த நிலையில் மீரா வாசுதேவன் தற்போது விபின் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் ’நாங்கள் அதிகாரப்பூர்வமாக மே 21ஆம் தேதி திருமணம் செய்து கொண்டோம், கோவையில் எங்கள் திருமணம் நடந்தது, இந்த திருமணத்தில் எங்களது குடும்பத்தைச் சேர்ந்த மிக சிலர் மட்டுமே கலந்து கொண்டார்கள், விபின் பாலக்காடு ஆலத்தூர் என்பதை பகுதியைச் சேர்ந்தவர், அவர் ஒரு சினிமா ஒளிப்பதிவாளர், சர்வதேச விருது வென்றவர்.

நானும் அவரும் 2019 ஆம் ஆண்டு முதல் இணைந்து பணியாற்றி வருகிறோம், கடந்த ஆண்டு முழுவதும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு இறுதியாக மே 21 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டோம். இது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட செய்தியாகவே எனது நலன் விரும்பிகள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இருக்கிறது. எங்களை ரசிகர்கள் ஆசீர்வதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மீரா வாசுதேவனின் திருமண புகைப்படம் அவரது இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement