• Sep 10 2024

விஜய் டிவியுடன் மைனா நந்தினி மோதலா? வலிய அழைத்தும் செல்லாதது ஏன்?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவி மெட்டீரியல் என சில நடிகர் நடிகைகளை அழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த பட்டியலில் இருந்தவர் மைனா நந்தினி என்பதும் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருந்தார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் விஜய் டிவி சில நிகழ்ச்சிகளுக்கு வலிய அழைத்தும் மைனா நந்தினி அதில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படும் நிலையில் விஜய் டிவிக்கும் மைனா நந்தினிக்கும் பிரச்சனையா என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்த மைனா நந்தினி, அதன் பின்னர் கிச்சன் சூப்பர் ஸ்டார், மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடி, உள்பட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். விஜய் டிவி மெட்டீரியலாகவே மாறிய அவருக்கு ’சரவணன் மீனாட்சி’ சீரியல் ஒரு நல்ல அந்தஸ்து கொடுத்தது என்பதும், அதன் பின்னர் தான் அவருக்கு மைனா நந்தினி என்ற பெயரே ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ’கல்யாணம் முதல் காதல் வரை’ ’சின்னத்தம்பி’ ’அரண்மனைக்கிளி’ ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ’வேலைக்காரன்’ உள்ளிட்ட விஜய் டிவி சீரியல்களில் நடித்த அவர் கடந்த சில மாதங்களாகவே விஜய் டிவி பக்கமே காணப்படுவதில்லை.

விஜய் டிவியே வலிய சில நிகழ்ச்சிகளுக்கு அழைத்தும் அவரால் அவர் அதில் கலந்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் மைனா நந்தினி விளக்கம் அளித்த போது ’தற்போது திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் வந்து கொண்டிருப்பதாகவும், அதுமட்டுமின்றி வெப் தொடரிலும் நடித்துக் கொண்டிருப்பதால் விஜய் டிவியில் இருந்து அழைப்பு வந்ததும் தன்னால் செல்ல முடியவில்லை என்றும் கூறினார். மேலும் எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவ்வாறு வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்றும் கூறினார்.

சமீபத்தில் ’சட்னி சாம்பார்’ என்ற வெப் தொடரில் மைனா நந்தினி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement