• Jan 19 2025

எனக்கு கழுத்துல காயமே வந்துடுச்சு..! ஆனா அவங்களுக்கு மைண்ட் செட் அப்படி தான்..? சங்கீதா பேட்டி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் சிறந்த காமெடி நட்சத்திரமாக திகழும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, பிரபல சீரியல் நடிகை சங்கீதாவைத் இன்றைய தினம் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு பலரும் வாழ்த்துச் சொல்லி வருகின்றனர். இவர்களின் திருமணப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

திருமகள் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் தான் நடிகை சங்கீதா. இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் வட்டாரமுண்டு.

இந்த நிலையில், பிரபல ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த நடிகை சங்கீதா, தனது கேரக்டரில் உள்ள சிக்கல் பற்றியும், எதிர்நீச்சல்  சீரியல் பற்றியும் பேசியுள்ளார். அதன்படி அவர் மேலும் கூறுகையில், 


இப்ப ரீசண்டா ஒரு கல்யாண சீன் போச்சு. ஒரு 10 நாளுக்கு அந்த நகைகள் எல்லாம் போட்டு இருந்தததுல என்ட கழுத்துல காயமே வந்துடுச்சு. அந்த சீனுக்கு ரொம்ப ஹார்ட் ஒர்க் போட்டன்.  ஆனா வெளிய இருந்து பாக்கிறவங்க.. என்ன இவங்க வில்லங்க தானே.. எப்பவும் முறைச்சிட்டே இருக்காங்க.. என்பது போல தான் அவங்களுக்கு மைண்ட் செட் இருக்கும்.

எங்க அம்மா கூட நான் ஒரே நெகட்டிவ் ரோல் பண்ணி பண்ணி நானே இப்ப ரூடா இருக்கன், எதுக்கு எடுத்தாலும் முறைக்கிற, ஏன் இப்படி இருக்கீங்க என திட்டுவாங்க ..


மேலும், சீரியலில் இப்படி தான் நடிக்கணும், படத்தில இப்படி நடிக்க கூடாது என நடித்தும் காட்டியுள்ளார்.

அத்துடன், எதிர்நீச்சல்  சீரியல் நிஜமாவே நல்லா இருக்கு..அதுல நிறைய எதார்த்தமான விஷயங்கள், பெண்களை பற்றிய விஷயங்கள், அவங்க பேசுற ஒவ்வொரு டயலொக்கும் எதார்த்தமா இருக்கும் என குறித்த சீரியல் பற்றி பெருமையாக பேசியுள்ளார்.

Advertisement

Advertisement