• Jan 19 2025

பப்லுவின் முதல் காதலி மிஸ் இந்தியாவா? இடையில் எமனான கேன்சர்..! கசப்பான அனுபவங்களை பகிர்ந்த பப்லு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ். இவர் தனது முதல் மனைவி உடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மலேசியாவை சேர்ந்த  24 வயது நிரம்பிய ஷீத்தல் என்பவருடன் உறவில் இருந்தார்.

தன்னை விட 27 வயது குறைவான பெண்ணுடன் பப்லு பிரித்விராஜ் உறவில் இருந்ததால் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பப்லு பிரித்விராஜ், நான் ஷீத்தலை பிரிந்து விட்டேன் என்று எங்கேயாவது கூறினேனா? அல்லது ஷீத்தல் எங்கேயாவது கூறினாரா? நீங்களே நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று கூறுகிறீர்கள்.

என்னுடைய வாழ்க்கையில் நிறைய ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன். இனி மேலும் திருந்தவில்லை என்றால் நான் முட்டாள் என்று அர்த்தம். இப்போது தான் எல்லாம் எனக்கு புரிகிறது என தாங்கள் பிரிந்ததை பட்டும் படாமல் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில்,  தனது 19 வயதில் ஏற்பட்ட முதல் காதலையும், அதில் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார் பப்லு. அதன்படி அவர் கூறுகையில்,

எனக்கு அப்போ 19 வயசு. நானும் எனது தங்கையும் ஒரு நடன போட்டிக்கு போயிருந்தோம். அப்போ  ஒரு கூட்டம் திடீரென சடாரென்று ஒரு பக்கமாக போய்க் கொண்டு இருந்தது. அது என்ன என்று பார்த்தா, அங்கு மிஸ் இந்தியாவாக இருந்த ஒரு பெண் வந்திருந்தார். 

அவரைச் சுற்றி ஈக்கள் போல இந்த மக்கள் கூடினார்கள். அவள் பேரழகியாக இருந்தாள். ஆனாலும் நான் அவளை பார்க்கக்கூடாது என்று, என்னை நானே கட்டுப்படுத்தி சமாளித்துக் கொண்டிருந்தேன். ஆனால் முடியவில்லை, மீண்டும் மீண்டும் என்னுடைய பார்வை அங்கு சென்று கொண்டே இருந்தது. 

இன்டைக்கும் ஞாபகம் இருக்கு. அவள் ரெட் கலர் ஜீன்ஸ் பேண்டும், ஒரு ஒயிட் கலர் டாப்பும் போட்டு இருந்தா. அந்த போட்டியில எங்களுக்கு தான் முதல் பரிசும் கிடைச்சது.


அந்த நேரம் என்ட தங்கச்சி குளிர்பானம் வேண்டும் என்று கேக்க, நானும் அதை வாங்கப் போனேன். அப்போது, மிஸ் இந்தியாவாக பார்க்கப்பட்ட அந்த பெண், திடீரென்று என் கண் முன்னே வந்து, எனது நடனத்தை பாராட்டினாள். 

நான் அவரிடம், அவர் பேசிய எல்லாவற்றுக்கும் நன்றி நன்றி என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தேன். உடனே அவள், உங்களுக்கு நன்றியை தவிர வேறு எதுவும் தெரியாதா என்று கேட்டாள். நான் இல்லை.. இல்லை.. என்று சமாளித்துக் கொண்டிருந்தபோது, உங்களுடன் ஆட வேண்டும் என்று சொன்னாள். ஆடலாமே என்று சொல்லி, தங்கையிடம் குளிபானத்தை கொடுத்து திரும்பி வருவதற்குள் டிஜே பிரேக் விட்டு விட்டார் இதனால் ஒரு 20 நிமிடம், நான் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.பிரேக் முடிந்து, டிஜே இசையை தொடர்ந்த உடன், அவளுடன் ஆடலாம் என்று நான் அவளை தேடினேன்.

அப்பொழுது அவள் இன்னொரு கேங்கில் ஆடிக் கொண்டிருந்தாள். சரி இவ்வளவுதான் நமக்கான வாய்ப்பு என்று நினைத்துக் கொண்டு கிளம்பும் பொழுது, என்னுடைய பின்பக்கத்தில் ஒரு கை பட்டது. அந்த கை அவளுடையது. 

உங்களுக்காகத்தான் நான் காத்திருந்தேன் என்று சொன்னாள். இதனையடுத்து நானும் அவளும் நடனம் ஆடினோம். கிட்டத்தட்ட இரவு இரண்டு மணி வரை நாங்கள் நடனம் ஆடிக் கொண்டே இருந்தோம். திடீரென்று இசையானது நின்று விட்டது. 

ஆனால், நாங்கள் ஆடிக் கொண்டே இருந்தோம். ஒரு கட்டத்தில் தான் எங்களுக்கு தெரிந்தது. இசை நின்று விட்டது என்று.. அதன் பின்னர் நாங்கள் ஒருவரை ஒருவர் அவ்வப்போது சந்தித்துக் கொண்டோம். ஒரு கட்டத்தில் அந்த சந்திப்பு நட்பாக மாறி காதலாக உருமாறியது. 


இதனையடுத்து என்னுடைய அம்மாவிடம் நான் இதை சொன்னபோது, என்னுடைய அம்மா உனக்கு 19 வயது தான் ஆகிறது என்று என்னை திட்டியதோடு, அவளையும் நேரில் சென்று திட்டி தீர்த்து விட்டார்.

இதனையடுத்து அவள் இனி உங்களை நான் சந்திக்க முடியாது என்றும் உங்களுடைய அம்மா என்னை அசிங்கமாக பேசி விட்டார் என்று சொன்னாள். ஆனால், அதை பற்றி எல்லாம் கவலைப்படவே இல்லை போடி.. என்று சொல்லி விட்டு, நான் என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன். 

ஒரு மூன்று மாதங்கள் கழித்து, அவருடைய நண்பர்கள் அவளை வந்து பார்க்குமாறு என்னை அனுப்பினார்கள் அப்போதும் கூட நான்.. அவளை  ஏன் நான் வந்து பார்க்க வேண்டும். அவள் தான் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டு போனாள் என்று விவாதம் செய்தேன். 

இதையடுத்து, அவர்கள் அவள் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதை என்னிடம் சொன்னார்கள். கிட்டத்தட்ட ஒரு ஆறு மாதத்தில் அவள் இறந்து விட்டாள்” என்றார். இவ்வாறு தனது முதல் காதல் பற்றி மனம் திறந்துள்ளார் பப்லு.

Advertisement

Advertisement