• Jan 19 2025

விஜய் டிவியில் மற்றொரு சீரியலில் அறிமுகமாகும் 'முத்து'..! இந்த காம்போ சூப்பரா இருக்கே..!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் கதாநாயகனாக நடிப்பவர் தான் வெற்றி வசந்த். இவருக்கு ஜோடியாக நடிப்பவர் தான் கோமதி பிரியா.

சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் காணப்படுவதோடு, தற்போது இதன் கதைக்களம் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் வெற்றி வசந்த் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மற்றொரு சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நீ நான் காதல்' என்ற சீரியலில் கெஸ்டாக என்ட்ரி  கொடுத்துள்ளார் வெற்றி வசந்த். ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்னி சீரியலிலும் கெஸ்ட் ஆக என்ட்ரி கொடுத்து இருந்தார்.


இவ்வாறான நிலையில்,  நீ நான் காதல் சீரியலில் வெளியான ப்ரோமோவில் வெற்றி வசந்த் காணப்படுகிறார். அதில் ஆஹா கல்யாணம் சீரியல் கதாநாயகியும் கெஸ்ட் ஆக கலந்து கொண்டுள்ளார். தற்போது இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


'நீ நான் காதல்' சீரியல் ப்ரோமோவில் வெற்றி வசந்தை பார்த்த ரசிகர்கள், இந்த சீரியல் நடிக்க அவரும் கமிட்டாகி விட்டாரா? ஆனால் முத்து எங்கே இருந்தாலும் அந்த இடம் வெற்றியாக தான் இருக்கும் என கமெண்ட்களையும் அள்ளிக் குவித்து வருகிறார்கள்.

அத்துடன் ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை அக்ஷயா மற்றும் வெற்றி வசந்தின் காம்போ அழகாக உள்ளது எனவும் பாராட்டி வருகிறார்கள். தற்போது பொன்னியின் அண்ணனாக வெற்றிவசந்த் சிறப்பு விருந்தினராக அந்த சீரியலில் கலந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement