• Jan 19 2025

என் ஹார்ட்ட கொடுத்து ரிட்டன் வாங்கியாச்சு.. வரலட்சுமிக்கு மார்க்கெட் அதிகம்! ஓபனாக பேசிய விஷால்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

'செல்லமே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்  தான் நடிகர் விஷால். இதை தொடர்ந்து திமிரு, சண்டைக்கோழி, தாமிரபரணி, பூஜை என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார்.

நடிகர் விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான படம் தான் மார்க் ஆண்டனி. இந்த திரைப்படத்தில் SJ சூர்யாவும் இணைந்து நடித்திருந்தார். ஆக்சன், காமெடி கலந்த திரில்லர் படமாக இந்த படம் காணப்பட்டதோடு, மார்க் ஆண்டனி வசூலிலும் வேட்டையாடி இருந்தது.

இதை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து வருகிறார் விஷால். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இந்த படம் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.  மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.


இந்த நிலையில், ரத்னம் படத்தின் ப்ரோமோஷன் பற்றி பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த நடிகர் விஷால், சமீபத்தில் நடைபெற்ற வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் பற்றியும் பேசியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,


லட்சுமியை நினைத்து நான் ரொம்பவே சந்தோஷப்படுகிறேன். தெலுங்கில் அவருக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கேரக்டரை பார்த்து மெய்சிலிர்த்து போன எனக்கு, அதன் பின்னர் ஹனுமான் படத்தில் வரலட்சுமியின் கேரக்டர் தான் மெய்சிலிர்க்க வைத்தது. 

அவர் கேரியரை தாண்டி தற்போது தனது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது சந்தோஷம்தான். வரலட்சுமியின் அம்மா எனக்கும் அம்மா போன்றவர். அவர் மிகவும் வலிமையானவர்,  அவரை போலவே அவர் மகள் வரலட்சுமி போல்ட் ஆன பொண்ணு, மிகவும் அமேசிங் ஆனவர் என கூறியுள்ளார்.

மேலும் உங்க ஹார்ட் இப்ப யாருகிட்ட இருக்கு எனக் கேட்டதற்கு, இப்ப என் ஹார்ட் என்கிட்ட தான் இருக்கு.  கொடுத்துக் கொடுத்து ரிட்டன் வாங்கிட்டேன் என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement