• Apr 23 2025

சல்மான்கானுக்கு துப்பாக்கியால் மிரட்டல் விட்ட தாதாக்கள்! உன் வீட்டுக்கு வெளிய சுட்டது நான்தான்! சுட்டத்துக்கு காரணம்...

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமா இன்று உலக அளவில் பேசப்பட்டு பிரபாமாக உள்ளது என்றால் அதற்கு பாலிவுட் ஸ்டார்களின் பங்களிப்பு பெரிய அளவில் உள்ளது என்றே கூறலாம். அவ்வாறு ஹிந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


பீவி ஹோ தோ ஐசி என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமாகியவர் சல்மான் கான் ஆவார். முதல் படமே அமோக வெற்றி பெற்ற நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகராகவும் மாறினார். தொடர்ந்து ஹாலிவுட் வரை சென்று கலக்கிய இவருக்கும் சமீபத்தில் பிரபல தாதாக்களால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூடு பெரும் பரபரப்பை ஏற்றப்படுத்தி உள்ள நிலையில் குறித்த துப்பாக்கி சூட்டை நடத்தியது நான்தான் என பொறுப்பேற்றுள்ளார் நிழலுலக தாதா அன்மோல் பிஷ்ணோய் என்பவர்.மேலும் "துப்பாக்கி சூடு வெறும் ட்ரைலர் தான் என்றும் சல்மான் கானுக்கு இதுவே முதலும் கடைசியுமான எச்சரிக்கை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.துப்பாக்கி சூட்டுக்கான காரணம் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றது   

Advertisement

Advertisement