• Feb 23 2025

இசைஞானி இளையராஜாவின் மகள் இலங்கையில் திடீர் மரணம்! பேரதிர்ச்சியில் தமிழ்த் திரையுலகம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் இலங்கையில் காலமானதாக வெளியாகி உள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், சற்று முன் இலங்கையில் காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


அதன்படி, பவதாரணிக்கு தற்போது 47 வயதான நிலையில், இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி சமீபத்தில் இலங்கை சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தர். இந்நிலையில் இன்று மாலை 5.30 மணியளவில் அவர் இலங்கையில் மரணமடைந்திருக்கிறார்.

இதேவேளை, சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement