• Jan 19 2025

பிரதீப் என்ன உத்தமனா? எல்லைமீறி உருட்டும் விசித்ரா! ஓடி ஒளிந்த Bully Gang?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் இறுதி வரை செல்லாவிட்டாலும், தற்போது வரையில் மக்கள் மனதில் நிறைந்து காணப்படுபவர் தான் பிரதீப் அன்டனி.

பிக் பாஸ் சீசன் 7 இல் இறுதி வரை சென்று, பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப், இடையில் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார்.

இதை தொடர்ந்து, பிக் பாஸ் டைட்டில் வின்னராக அர்ச்சனா வெற்றி பெற்றார். இதில் பிரதீப்பின் பங்களிப்பும் அளப்பெரியது.


ஆனாலும், பிரதீப்பின் ரெட் கார்ட் விஷயம் தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களில் கலவரமாகவே பேசப்படுகின்றது.

பிக் பாஸ் வீட்டில் அதிகளவில் கெட்ட வார்த்தை பேசுகிறார், அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டே பிரதீப் வெளியேற்றப்பட்டார்.

ஆனாலும், நாளடைவில் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகியது. அவருடைய ரசிகர்களின் வாக்குகளினால் தான் அர்ச்சனாவுக்கு அதிக ஒட்டு கிடைத்தது எனவும் ஒரு கதை கசிந்தது.


பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், அதில் வெற்றி பெற்ற ஒவ்வொரு போட்டியாளர்களும் தற்போது பேட்டியளித்து வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையில், அர்ச்சனா உட்பட வெளியில் வந்து பேட்டியளித்த அனைவரும், பிரதீப் பற்றி நல்ல விதமாகவே கூறி இருந்தார்கள்.

ஆனாலும், பிக் பாஸ் வீட்டில் காணப்பட்ட A டீம் இன்னும் எதிர்பார்த்த வகையில் பேட்டி கொடுக்கவில்லை. அதிலும் முக்கியமாக மாயா..

அதேவேளை, பிக் பாஸ் டைட்டில் அர்ச்சனா வெற்றி பெற்ற போது, மாயா மற்றும் விசித்ராவின் முகங்கள் உக்கிரமாகவே காணப்பட்டது. விசித்ரா அர்ச்சனா நடிப்பது போலவும், மாயாவே உண்மையான வெற்றியாளர் என்பது போலவும் செயற்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement