• Apr 27 2024

கிரிக்கெட்டை வைத்து அரசியல் பேசியதா? ப்ளூ ஸ்டார் விமர்சனம் இதோ..

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பா. ரஞ்சித்தின் நண்பரும் அறிமுக இயக்குநருமான ஜெயக்குமார் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ளது ப்ளூ ஸ்டார் திரைப்படம். 

நடிகர் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி நடிப்பில் வெளியாகி உள்ள இந்த படம் கிரிக்கெட் விளையாட்டையும் அதை சுற்றி நடக்கும் உள்ளூர் அரசியலையும் மையப்படுத்தி உருவாகி உள்ளது.

அந்த வகையில், தமிழ்த் திரையுலகில் இன்றைய தினம் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் விமர்சனம் பற்றி பார்ப்போம்.

ப்ளூ ஸ்டாரில், அரக்கோணம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு உள்ளூர் கிரிக்கெட் அணிகள் ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன. அதாவது, அரக்கோணத்தில் அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் அணிக்கும் சாந்தனுவின் ஆல்ஃபா மேல் கிரிக்கெட் அணிக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே போட்டியும் சண்டையும் நடக்கின்றது. 


எனினும், கிரிக்கெட் பிரச்சனை ஒரு கட்டத்திற்கு மேல் பொதுப் பிரச்சனையாக மாற எதிரிகளாக இருக்கும் இருவரும் ஒரே கருத்துக்காக ஒன்றிணைந்து போராடும் போது என்ன என்ன பிரச்சனைகள் உருவாகிறது, அதை எவ்வாறு சமாளிக்கின்றார்கள் என்பது தான் இந்த ப்ளூ ஸ்டார் படத்தின் கதை.

படத்தின் ஆரம்பத்திலேயே, இரு அணிகளுக்கிடையேயான போட்டி கிண்டல் செய்யப்பட்டு, முழு படமும் அந்த ஒரு போட்டியைப் பற்றியதாக இருக்கும் என்று நம்மை நினைக்க வைக்கிறது.  

ஆனால், காதல், குடும்பம் என இரண்டும் சரிசமாக இணைந்து நிதானமாக நகர்கிறது முதற்பாதி. அடுத்த பாதி பெரும்பாலும் மைதானங்களில் மட்டுமே நகரும் கதையை கொண்டமைந்துள்ளது.


காதல், ஆக்ரோஷம், குற்றவுணர்வு என நகரும் ஒரு கல்லூரி இளைஞனின் கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை, கதாபாத்திரத்தின் தன்மையையறிந்து நேர்த்தியாக வழங்கியுள்ளார் அசோக் செல்வன்.

குறித்த படத்தில் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் இடையே ஆன காதல் காட்சிகள் மனதை வருடும் வகையில் அமைந்துள்ளது.

அதேவேளை, நடிகர் சாந்தனு படத்தின் துணை நாயகனாக நடித்திருந்தாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு புரிதலுடன் நடித்திருக்கிறார். 

ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக செல்லும் படம் ஒரு கட்டத்துக்கு மேல் இப்படித்தான் சென்று, இப்படித்தான் முடியும் என்கிற யூகிக்க முடிகிற கதையில் கச்சிதமாக கடைசி ஓவர் வரை சென்றுள்ளது.

இறுதியாக சாதிய பிரச்னை, 90-களின் காலகட்டம், திறமைகளுக்கு எதிரான அதிகாரம் என பல உள்மடிப்பு கொண்ட பிரச்னைகளை கிரிக்கெட் மூலம் சொல்லி, அதில் அபார வெற்றியைப் பெறவில்லை என்றாலும் ஆர்ப்பாட்டம் இல்லாத வெற்றியைப் பெற்றிருக்கிறது ப்ளூ ஸ்டார் திரைப்படம்.






 

Advertisement

Advertisement

Advertisement