• Oct 29 2025

அன்னை தெரேசா ரேஞ்சுக்கு முத்துக்கு கொடுக்கும் பில்டப்.! சீதா எடுத்த சபதம்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் ,   ரவி சாப்பிட அமரும் போது அவருடைய சாப்பாட்டில் உப்பை கொட்டி விடுகின்றார் ஸ்ருதி. அதன் பின்பு  ஸ்ருதி வரும் வழியில் சவர்காரத்தை வைத்து  அவரை கீழே  விழ வைக்கிறார்  ரவி. இவர்கள் இருவரும் சண்டை போடுவதை பார்த்த முத்துவும் மீனாவும் அவர்கள் இருவரும் அமர்ந்து பேசினால் எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரும் என்று பிளான் போடுகின்றார்கள். 

இதை தொடர்ந்து சத்யா தான்  வேலையை விட போறேன் என்று சொன்ன விஷயத்தையும், அதன் பின்பு அவர்கள் தனக்காக ரூல்ஸ்சை மாற்றிக் கொண்டதாக சொன்னதையும் முத்துவிடம் சொல்ல, அப்படி என்றால் நீ வேலையை விடவில்லையா? என்று மீண்டும் சத்யாவுக்கு அட்வைஸ் பண்ணுகின்றார். 

இன்னொரு பக்கம் சீதாவை பேங்கில் கொண்டு போய்  காசு போட்டு விட்டு வருமாறு மேனேஜர் சொல்ல, சீதா முதலில் மறுக்கிறார். பின்பு ஆட்டோ டிரைவருடன் செல்கிறார். 


அவர்கள் போகும் வழியில் முத்துவை பார்க்கின்றார்கள். இதனால் ஆட்டோ டிரைவர் அவரை சந்திக்க ஆட்டோவை நிறுத்தி விட்டு செல்ல, கோவப்பட்ட சீதா அவருக்கு பின்னால் செல்கிறார். இதன் போது நடந்த உண்மை எல்லாவற்றையும் ஆட்டோ டிரைவர் சீதாவுக்கு சொல்கிறார்.

அதன்பின் அம்மா வீட்டுக்கு வந்த மீனா, சீதா பற்றி பேசி அழுது புலம்புகிறார். மேலும் அவள் தான் என் முதல் குழந்தை, அவளுடன் பேசாமல் இருக்க முடியவில்லை என புலம்பிக் கொண்டு இருக்க, சீதா வந்து என்னை மன்னிச்சிடு என்று மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

மேலும் முத்து மாமாவால தான் எனக்கு வேலை கிடைச்சுது என்று ஆட்டோ டிரைவர் சொன்ன விஷயங்களை சொல்கிறார். இதனால் இனி யார் சண்டை போட்டாலும் நான் உன் கூட கதைக்காமல் இருக்க மாட்டேன் என்று சொல்லுகிறார். முத்துவிடமும் மன்னிப்பு கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement