• Oct 29 2025

சரவணனிடம் கையும் களவுமாக சிக்கிய மயில் அப்பா... செந்திலின் வார்த்தையால் மனமுடைந்த ராஜி.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, அம்மாவோட பிறந்தநாளுக்கு எடுத்த போட்டோவை பெருசா மாட்டனும் என்கிறார் கோமதி. அதைக் கேட்ட ராஜி கண்டிப்பா மாட்டிடலாம் என்கிறார். பின் கோமதி பல வருசத்து கனவை என்ர புள்ள இப்பதான் நிறைவேற்றி வைச்சிருக்கான் ரொம்ப சந்தோசமா இருக்கு என்கிறார். இதனை அடுத்து செந்தில் மீனாவை பார்த்து நம்ம வீட்டுக்குப் போகலாம் என்கிறார்.


அதைக் கேட்ட உடனே மீனாவுக்கு முகம் மாறுது.. பின் ராஜி செந்தில் கிட்ட இன்டைக்கு நீங்களும் அக்காவும் இங்கேயே இருங்க.. அந்த வீட்டுக்குப் போக வேணாம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட செந்தில் இல்ல பிறகு அப்பா வந்தால் ரெண்டு நாளில புது வீடு கசந்து போய்ட்டா என்று கேப்பாரு நாங்கள் அந்த வீட்டுக்கே போறோம் என்கிறார்.

அதனை அடுத்து சக்திவேல் கோபமா இருக்கிறதை பார்த்த பாட்டி எதுக்காக இப்புடி இருக்கிற என்று கேட்கிறார். அதுக்கு சக்திவேல் ஏன் நடந்தது உங்களுக்குத் தெரியாதா என்கிறார். பின் முத்துவேல் எல்லாருமே இப்ப அசிங்கப்படுத்துறாங்க என்று கத்துறார். அதைக் கேட்ட சக்திவேல் எல்லாம் இவனால தான் என்று குமாரைப் போட்டு அடிக்கிறார்.


மறுபக்கம் பாண்டியனோட கடைக்கு போன ஒராள் ஊரு முழுக்க உங்களை பற்றித் தான் பேசிட்டு இருக்கினம் என்கிறார். அதைக் கேட்ட பாண்டியன் எதுக்காக என்னை பற்றி பேசுறாங்க என்று கேட்கிறார். அதுக்கு அவர் உங்க மாமியாரோட பிறந்தநாளை சிறப்பா கொண்டாடினதால தான் எல்லாரும் பாராட்டுறாங்க என்கிறார். அதனை அடுத்து மயிலோட அப்பா கல்லால இருந்து காசு எடுக்கிறதை பார்த்த சரவணன் கோபப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement