• Jul 09 2025

மைக்கேல் மதன காமராஜன் நடிகர் காலமானார்.. நடிகர்கள் இரங்கல்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

’மைக்கேல் மதன காமராஜன்’  திரைப்படத்தில் வரதுக்குட்டி என்ற கேரக்டரில் நடித்த நடிகர் காலமானதை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்த ’மைக்கேல் மதன காமராஜன்’  என்ற திரைப்படத்தில் காமேஸ்வரன் என்ற கேரக்டரில் நடித்த கமல்ஹாசன் உடன் வரதுக்குட்டி என்ற கேரக்டரில் நடித்தவர் தான் நடிகர் கோபிநாத் ராவ்.

இவர் கிரேசி மோகனின் நாடகங்களில் நடித்துள்ளார் என்பதும் பல ஆண்டுகள் கிரேசி மோகன் நாடக குரூப்பில் இருந்ததால் அவருடைய பரிந்துரையின் பெயரில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிரேசி மோகன் சகோதரர் மது பாலாஜி தனது சமூக வலைத்தளத்தில் வரதுக்குட்டி கேரக்டரில் நடித்த கோபிநாத் ராவ் காலமானதாக அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கோபிநாத் ராவ் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் என்றும் அவருக்கு சர்க்கரை நோய் இருந்ததால் அவதியில் இருந்ததாகவும் இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி நேற்று அவர் காலமானதாகவும் மது பாலாஜி தெரிவித்துள்ளார்.



மறைந்த கோபிநாத் மிகவும் நல்ல மனிதர் என்றும் அவருடைய காமெடி சென்ஸ் வேறு யாருக்கும் வராது என்றும் அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும் என்றும் கமல்ஹாசனையே பல நேரத்தில் சிரிக்க வைத்தவர் கோபிநாத் ராவ் என்றும் மதுபாலாஜி புகழாரம் சூட்டினார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு எங்கள் நாடக குரூப்பில் ’சாட்டை முருகன்’ என்ற நாடகத்தில் அவர் மீண்டும் நடித்தார் என்றும் அவருடைய நடிப்பை மக்கள் மிகவும் ரசித்தார்கள் என்றும் அவர் மிகவும் நல்ல மனிதர் என்பதால் தான் கிரேசி மோகன் உடன் செல்ல வேண்டும் என்று சென்று விட்டார் என்றும் அவருடைய ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள் என்றும் மதுபாலாஜி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

கோபிநாத் ராவ் மறைவு குறித்து கேள்விப்பட்ட பல நடிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் ’எங்கள் குரூப்பில்  எல்லோருக்கும் சீனியர் ஆன கோபிநாத் சார் அவர்கள் காலமாகிவிட்டார். மிகச் சிறந்த நடிகர் மற்றும் மிகச் சிறந்த மனிதர், அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement