• Jan 21 2025

விஜய் பேச்சுக்கு மதிப்பிருக்கா? நாய்களையும் விட்டு வைக்காத த.வெ.க உறுப்பினர்கள்!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழும் இளைய தளபதி விஜய் நேற்றைய தினம் தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்.

நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கோட் படத்தின் இரண்டாவது சிங்கள் பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடல் யுவனின் இசையில் அண்மையில் மறைந்த பவதாரணியின் குரலில் அமையப் பெற்றிருந்தது.

இளையராஜாவின் மகளும் யுவன் சங்கர் ராஜாவின் அக்காவுமான பவதாரணி, சமீபத்தில் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் சிகிச்சை பெற்று வந்ததும் இந்த பாடலை பாட வைப்பதற்காகவே இவ்வாறு வெங்கட் பிரபுவும் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனாலும் அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார்.


தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரத்தில் உயிர் இழந்த அவர்களுக்காக தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என விஜய் கட்டளையிட்டு இருந்தார். ஆனாலும் விஜய் ரசிகர்கள், தமிழக வெற்றிக் கழகத்தினர் உள்ளிட்ட பலரும் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு சில நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார்கள்.

அதன்படி மதுரையில் பராமரிப்பு இல்லாத நாய்கள், விபத்தால் காயமடைந்த நாய்கள், மாற்றுத்திறனாளி நாய்கள், ஆதரவற்ற நாய்கள், நோய்வாய்ப்பட்ட நாய்கள் என்று வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்துள்ளார்கள். இது பார்ப்போர்க்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement