• Oct 22 2024

விஜய் சேதுபதியின் அடுத்த பட இயக்குனர் யாரு தெரியுமா? வெளியான அப்டேட்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக கலக்கி கொண்டு இருக்கும் விஜய் சேதுபதி இறுதியாக நடித்த திரைப்படம் மகாராஜா. இந்த திரைப்படம் வசூலிலும் வேட்டையாடி வருகின்றது.

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான இந்த படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு இதுவரையில் 60 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இந்த படத்தை தியேட்டரில்  சென்று பார்த்த ரசிகர்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் புதிய பட இயக்குனர் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன.


அதன்படி விஜய் சேதுபதியின் புதிய படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த இயக்குனர் சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான  விமர்சனங்களை பெற்றது.

இதேவேளை, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'ஏஸ்' திரைப்படமும் திரைக்கு வர உள்ளதாம்.

Advertisement