• Jan 19 2025

மகனுக்காக உருகும் நெப்போலியன்! வெளியானது "எனது மகனென..." பாடல்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் கோலாகலமாக ஜப்பானில் நடைபெற்று முடிந்தது. அந்த நிகழ்வுக்கு ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.  நடிப்பிலும், அரசியலிலும் புகழின் உச்சத்தில் இருந்த நெப்போலியன் இவரின் மூத்த மகன் தனுஷ்-அக்ஷயா என்ற என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். 


இவர்களின் திருமணம் முடிந்த கையோடு ஜப்பானில் சுற்றி பார்ப்பதற்காக குடும்பத்துடன் அவர்கள் செல்லும் விடீயோக்களை அவ்வப்போது இணையத்தில் நெப்போலியன் பதிவிட்டு வருகிறார். பல சர்ச்சைகளுக்கு மத்தியில் முடிந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்நிலையில் மகன் தனுஷின் சிகிச்சைக்காக பலவருடங்களுக்கு முன்பே அனைத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார் நெப்போலியன். அதன் பின்னர் அங்கேயே பிஸ்னஸ் ஆரம்பித்து நடத்தி அதிலும் சாதித்து வருகிறார் நெப்போலியன். 


இந்நிலையில் நெப்போலியனின் மகன் தனுஷிற்காக எழுதப்பட்ட பாடல் இன்று BEHINDWOODS  சேனலில் ரிலீசாகி உள்ளது. அந்த பாடல் "எனது மகனென" என்று ஆரம்பிக்கிறது. தற்போது இது வைரலாகி வருகிறது. இதோ அந்த பாடல்  


Advertisement

Advertisement