• Nov 22 2025

ஒரே நாளில் மோத போகும் தளபதி விஜய் மற்றும் சூர்யா...! குஷியில் ரசிகர்கள்...!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக கங்குவா திரைப்படம் வெளியாகி இருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. சூர்யாவிற்கு கங்குவா மிகப்பெரிய கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படம் தோல்வியை சந்தித்தது.  இது சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் சூர்யா அடுத்ததாக சூர்யா 44 என அழைக்கப்பட்டு படப்பிடிப்பு நடித்து வருகிறார். இதனை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகின்றார். அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் இப்படம் திரையில் வெளியாகும் என தெரிகின்றது. மேலும் இது முடிந்தகையோடு ஆர்.ஜே பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா 45  திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். 


இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்கும் என தெரிகின்றது. சூர்யா மற்றும் ஆர்.ஜே பாலாஜியின் காம்போவில் உருவாகும் இப்படத்தை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கின்றனர்.


இந்த திரைப்படம் அடுத்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானால் சிறப்பாக இருக்கும் என்பதே சூர்யா ரசிகர்களின் ஆசையாக உள்ளது. ஆனால் தளபதி விஜய் வினோத் இயக்கத்தில் தான் நடித்துவரும் தளபதி69 திரைப்படம் தீபாவளி முன்னிட்டே ரிலீசாகவுள்ளது. இதனால் சூர்யா-விஜய் ஒரே நாளில் மோதுவதாக அமையும். 

Advertisement

Advertisement