• Dec 04 2024

யூடியூப் ரிவ்யூவில் இப்படி ஒரு பிரச்சினையா! என்ன சொல்கிறார் ப்ளூ சட்டை மாறன்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் கடந்த வாரம் ரிலீசானது. இது  இயக்கத்தில்  அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. திரைக்கதையை பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு ஆளானது.


இப்படியான நிலையில் படத்தின் முதல்நாள் முதல் காட்சி முடிந்து வெளியே வரும் ரசிகர்களிடம் பல யூடியூப் சேனல்கள் பேட்டி எடுத்து அதனை வெளியிட்டார்கள். இது இணையத்தில் வேகமாக பரவியதால் இதனால் படத்தின் வசூலும் சரிந்தது. 


இதற்க்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து கண்டன அறிக்கை வெளியானது. அதேபோல் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தரப்பில் இருந்தும், படக்குழுவினர் குறிப்பிடும் யூடியூப் சேனல்களுக்கு மட்டும் முதல் நாள் முதல் காட்சி விமர்சனத்தினை பதிவு செய்துகொள்ள அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.


இது தொடர்பாக பிரபல விமர்சகர், ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், " பப்ளிக் ரிவியூவிற்கு தடை என்று கூறினார்கள். ஆனால் இன்று அசோக் செல்வன் நடிப்பில் வந்துள்ள எமக்கு தொழில் ரொமான்ஸ் படத்தின் பப்ளிக் ரிவியூ வெளியானது.


பாசிடிவ் ரிவியூ மட்டும் சொல்பவர்கள், பாசிடிவ் ரிவியூ மட்டும் அப்லோட் செய்யும் சேனல்களுக்கு இந்த தடை பொருந்தாது என்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வாழ்க ஜனநாயகம்" எனப் பதிவிட்டுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement