• Jan 19 2025

ரோகிணிக்கு தக்க பதிலடி கொடுத்த மீனா.. விஜயாவுக்கு கிடைத்த கண்டிப்பு!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், கிச்சனுக்கு வந்த ரோகிணி எதுக்கு நீங்க பணம் கொடுக்குறேன்னு சொன்னீங்க மாமா கிட்ட நல்ல பெயர் எடுக்கவா என்று மீனாவிடம் கேட்க, நீங்க எதுக்கு சொன்னீங்க அத்தை கிட்ட நல்ல பேர் எடுக்கவா என கேட்டு ரோகிணிக்கு பல்பு கொடுக்கிறார்.

அதன் பிறகு எந்த நாளும் சவாரி வராது. காசை எப்படி கொடுப்பீங்க? என்ட புருஷன் ஆயிரம் ஆயிரமா சம்பாதிப்பார் என மீனாவை தரக்குறைவாக பேச, இத்தனை வருஷமும் இந்த வீட்டுக்கு என்ட புருஷன் தான் காசு கொடுத்துட்டு இருந்தார் என மீண்டும் ரோகிணிக்கு பல்பு கொடுக்கிறார் மீனா.

அதன் பின்பு அண்ணாமலை இன்ஜினியரை வரவைத்து வீடு கட்ட எவ்வளவு முடியும் எனக் விசாரிக்க, 5 லட்சம் ஆகும் என சொல்லுகிறார். பணத்திற்கு பத்திரத்தை அடகு வைத்து விடலாம் என சொல்ல, விஜயா அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றார்.


மேலும் இவ என்ன மாளிகையில் இருந்தா பிறந்தவ? என்று மீனாவை குத்தி காட்டி பேச அதற்கு மீனா எனக்கு மாளிகையில் வாழனும்னு ஆசை இல்ல. குடிசையில் இருந்தாலும் சந்தோஷமா இருப்பன். எங்கிருந்தாலும் மனசு நல்லா இருந்தா போதும் என பதிலடி கொடுக்கிறார். ஆனால் வீட்டு பத்திரத்தை தர மாட்டேன் என விஜயா உறுதியாக இருக்கின்றார்.

இதை அடுத்து மீனாவின் அப்பா ரயிலில் அடிபட்டு செத்த கதையை மீண்டும் விஜயா எடுத்துப் பேச, அண்ணாமலை இப்ப நிறுத்துறியா என எல்லார் முன்னாடியும் விஜயாவை கண்டிருக்கின்றார்.

அதன் பின்பு ரூமுக்கு போன ஸ்ருதி, எப்ப பார்த்தாலும் உங்க அம்மா மீனாவை திட்டிக்கிட்டே இருக்காங்க என்கிட்ட இப்படியெல்லாம் பேசினால் வாயிலே ஸ்டாப்ளர் போட்டு இருப்பேன் என ரவியிடம் சொல்லுகிறார்.

இறுதியாக வீட்டில் நடந்த பிரச்சனைகளை பற்றி அறிந்த சுதா, ஐந்து லட்சம் பணத்தைக் கொண்டு வந்து குடும்பத்தை பிரிக்க  பிளான் போட்டு கிளம்பி வருகின்றார். வீட்டுக்கு வந்ததும் வீடு கட்ட எங்க வீட்டுக்காரர் தானே லோனுக்கு ஏற்பாடு பண்ணினாரு என பேசுக் கொடுத்து பிரச்சினையை ஆரம்பிக்கின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement