• Jan 18 2025

’கல்கி’க்கு புரமோஷன் செய்த கமல், ‘இந்தியன் 2’ ப்ரமோஷனுக்கு மறுத்தாரா? வேகமாக பரவும் வதந்தி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் வெறும் 19 நிமிடங்கள் வரும் காட்சிகளில் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படத்திற்கு விழுந்து விழுந்து ப்ரமோஷன் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஹீரோ வேடத்தில் நடித்த ’இந்தியன் 2’ படத்திற்கு அவர் ப்ரமோஷன் பணிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்று வதந்திகள் உலாவி வருகின்றன.

கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மும்பையில் இந்த படத்தின் முக்கிய ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.

’இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட போது கமல்ஹாசனுக்கு ஒரு சம்பளம் பேசப்பட்டதாகவும் ஆனால் ’விக்ரம்’ படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து கமல்ஹாசன் தனது சம்பளத்தை அதிகமாக கேட்டதாகவும் அதற்கு லைகா நிறுவனம் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கோபத்தில் தான் கமல்ஹாசன் ப்ரமோஷன் பணிக்கு ஒத்துழைப்பதில்லை என்ற ஒரு வதந்தி பரவி வருகிறது.

ஆனால் என்றுமே கமல்ஹாசன் சம்பளத்திற்காக இது மாதிரி செய்ததில்லை என்றும், இனி மேலும் அவ்வாறு செய்ய மாட்டார் என்றும் ’இந்தியன் 2’ படத்தின் ப்ரமோஷன் பணிகளில் அவர் முழுமையாக ஒத்துழைப்பு தருவார் என்றும் அவரது தரப்பு தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் குறித்து வதந்தி பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கமல்ஹாசன் கலைக்காக பிறந்தவர் என்றும் அவர் என்றுமே காசை பெரிதாக நினைத்ததில்லை என்றும் அவரது ரசிகர்களும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement