• Jan 19 2025

முடியாது என்று கதறிய ரோகிணியை அலற வைத்த விஜயா! ஜீவாவை நெருங்கிய மனோஜ்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், ரோகிணியை தோப்புக்கரணம் போட சொல்லி, கற்பூர தீபம் காட்ட சொல்லவும் ரோகிணி முடியாது என்று சொல்லுகிறார். இதனால் ரோகிணியின் கையை இழுத்து வைத்து கற்பூரம் ஏற்றி தீபம் காட்டுகிறார் விஜயா. ஆனால் கை சுட்டுவிட அதனை தட்டி விடுகிறார் ரோகிணி.

இதையடுத்து ஜீவாவுடன் கோவிலுக்கு வந்த முத்து 10 நிமிஷம் காரில் இருங்க தலைய கட்டிட்டு வாரேன் என கோவிலுக்கு செல்கிறார். கொஞ்ச நேரம் கழித்து அவர் காரை விட்டு வெளியே இறங்குகிறார்.

மறுபக்கம் காரில் இருக்கும் ஜீவா வெளியே வந்து நிற்க மனோஜ் போன் வந்ததால் வெளியே வர அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடி ஒளிகிறார். மனோஜ் போன் பேசிக் கொண்டே கார் பக்கத்தில் வர ஜீவா முகத்தை மறைத்தபடி உட்கார்ந்து இருக்கிறார். 


இதை தொடர்ந்து பரிகாரம் எல்லாம் முடிய பூஜை செய்யும் போது ரோகிணியின் அப்பா பெயர் என கேட்க, அவர் தெரியாமல் முழிக்கிறார். அதன்பின் அப்பா பெயர் தனசேகர் என்று சொல்ல, நட்சத்திரம் தெரியாமல் முழிக்கிறார். இறுதியாக அதையும் சொல்லி சமாளிக்கிறார்.

அதன்பின் நடந்தவற்றை வித்யாவிடம் சொல்ல, அவர் சிக்கன் ஓடர் பண்ணி சாப்பிடுகிறார். எனக்கும் தருமாறு ரோகிணி கேட்க, சாமிக்குத்தம் ஆகிடும் இந்த பரிகாரத்தை உடம்ப குறைக்க இரு, இல்லாடி எல்லா பிரச்சனையும் முடியனும் என்று சொல்லி வேண்டு என சொல்ல, ஆமா இனி என் மாமியார் கூட இருக்க முடியாது. மனோஜ்க்கு கனடா வேல கிடைச்சா நானும் போய்டுவன். காசுக்கு ஏதும் பண்ணனும் என சொல்லுகிறார்.

இன்னொரு பக்கம் மனோஜ் ரோகிணிக்கு கை, கால் அமுக்கி விட விஜயா வந்து பேசுகிறார். 48 நாளைக்கு அவ பக்கத்துலயே போக கூடாது என்று. ரோகிணி சாப்பிட வரவும் முத்து, விரதம் இருக்கிறா என்று ஞாபகப்படுத்த ஆமால என்று விஜயாவும் சொல்லுகிறார். மேலும் மீனாவை ரோகிணிக்கு சாப்பாடு செய்து கொடுக்க சொல்ல, அவைக்கு தேவையானதை அவ தான் செய்யணும் என்று சாமியார் சொன்னாருல என்று முத்து ஞாபகப்படுத்த ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement