• Nov 22 2024

கமல்ஹாசனால் கோடிக்கணக்கில் நஷ்டம்.. மீள முடியாத துயரில் இயக்குனரின் குடும்பம்..

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ’உத்தமவில்லன்’ என்ற திரைப்படத்தை தயாரித்த இயக்குனர் லிங்குசாமியின் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம் என்றும் இந்த படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகியும் இந்த நஷ்டத்தை ஈடு கட்டும் விதமாக கமல்ஹாசன் எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்றும் லிங்குசாமி தரப்பில் இருந்து அதிருப்தி தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’உத்தம வில்லன்’. இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி படுதோல்வி அடைந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி என்ற நிலையில் அதில் பாதி கூட தயாரிப்பாளருக்கு தேறவில்லை என்பது சோகமான விஷயமாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ’உத்தம வில்லன்’ தோல்வி காரணமாக அந்த நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் இன்னொரு படத்தில் நடித்து தருகிறேன் என்று கமல்ஹாசன், லிங்குசாமிக்கு வாக்குறுதி அளித்திருந்ததாகவும் ஆனால் கிட்டத்தட்ட ஒன்பது வருடம் ஆகியும் அதை கண்டு கொள்ளாமல் கமல் இருப்பதால் லிங்குசாமி தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.'



இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக லிங்குசாமி ’உத்தம வில்லன்’ படம் குறித்து பேட்டி அளித்தும், அறிக்கைகளை வெளியிட்டும்  வருவதாகவும் இந்த பேட்டியை பார்த்தாவது கமல்ஹாசன் மனம் இறங்கி லிங்குசாமிக்கு உதவி செய்யும் வகையில் ஒரு படம் நடித்து கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கமல்ஹாசன் கொஞ்சம் கூட லிங்குசாமியை கண்டு கொள்ளவே இல்லை என்றும் கமல் தரப்பை அணுகிய போதிலும் அவரிடமிருந்து எந்தவிதமான வாக்குறுதியும் வரவில்லை என்றும் லிங்குசாமி தரப்பினர் கூறி வருவதாக தெரிகிறது.

கமல்ஹாசனால் ஒரு இயக்குனர் மற்றும் அவருடைய நிறுவனம் மிகப்பெரிய நஷ்டம் அடைந்ததை ஈடு செய்யும் வகையில் அவர் நினைத்தால் லிங்குசாமியின் நிறுவனத்திற்கு ஒரு புத்துயிர் கொடுக்கலாம், ஆனால் கமல் அதை கண்டு கொள்ளாமல் இருப்பது திரை உலகினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement