• Jan 18 2025

பெண்கள் ரூமிற்கு தாவிய ராணவ்! கோவத்தில் கத்திய மஞ்சுரி! கடுப்பில் விஷால்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தற்போது ட்ரெண்டிங்கில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது பல ரசிகர்களின் பேவரட் ஷோவாக மாறியுள்ளது. இதனால் ரசிகர்கள் தீவிரமாக பார்த்து வருகிறார்கள். இந்த சீசனை விஜய் சேதுபதி சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். முன்னைய போட்டியாளர்கள் புதிய போட்டியாளர்கள் என அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தினை ஆடி வருகிறார்கள்.


ஆனால் இந்த சீசன் முன்னைய சீசன் போன்று இல்லாமல் சற்று மந்தமாக இருக்கிறதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ராணவ் பெண்கள் அனைவரும் இருக்கும் போது ஆண்கள் அணியில் இருந்து பெண்கள் அணி அறைக்கு தாவுகிறார்.


இதனை பார்த்த மஞ்சுரி எப்படி நீங்க பெண்களின் அனுமதி இல்லாம அப்படி பாய்ந்து செல்லலாம் என்று கேட்கிறார். இதனை பார்த்த ராணவ் நான் எல்லார் முன்னாடி தானே குதித்தேன் நீங்க தூங்கிட்டு இருக்கும் போது குதிக்க வில்லையே? என்று கேட்கிறார். அதற்கு மஞ்சுரி நீங்க பாட்டுக்கு குதிக்கிறிங்க அதுவும் இல்லாம அங்க போய் நிண்டு ஓவரா பண்ணுறிங்க என்று சொல்கிறார்.


ஹவுஸ் ரூல்ஸ்ச அப்படி பிரேக் பண்ண ஏலாது என்று சொல்கிறார். அதற்கு ராணவ்  சரி  என்ன டார்கெட் பண்ணாதீங்க மஞ்சுரி, நான் விஷால் மாதிரி பண்ணுனேன் ஓகேயா என்று சொல்கிறார். இதனால் விஷால் கோபமடைந்து நீ பண்ணுன தப்ப ஓத்துக்கோ இல்லனா விஷால் மாதிரி பண்ணுனேன் என்று சொல்லாத என்று சொல்கிறார். அத்தோடு ப்ரோமோ நிறைவடைகிறது.  


Advertisement

Advertisement