• Jan 19 2025

மக்கள் செல்வனுக்கு அடித்த ஜாக்பாட்.. அமெரிக்காவுக்கு பறக்கும் மகாராஜா டீம்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் விஜய் சேதுபதி. அதைத் தொடர்ந்து ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இதை தொடர்ந்து விக்ரம் வேதா, மாஸ்டர், ஜவான், விக்ரம் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்திருந்தார். தற்போது இவரது நடிப்பில் வெளியான மகாராஜா படமும் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் மகாராஜா படம் குறித்த முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது அமெரிக்காவின்  லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்த திரைப்படமும் திரையிடப்பட உள்ளதாம்.


இது குறித்த அறிவிப்பை லாஸ் ஏஞ்சல்ஸில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை முதல் ஜூன் 30-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் மகாராஜா திரைப்படம் கடைசி நாளான 30-ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதில் படக்குழுவினரும் கலந்து கொண்டு ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்க உள்ளதாக கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement