• Jan 19 2025

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு அடித்தது அதிர்ஷ்டம்! வெள்ளித்திரையில் ஹீரோயினாக என்ட்ரி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

கடந்த காலங்களில் திரைப்படங்களில் ஹீரோயின்களாக வலம் வந்த பிரபல நடிகைகள் வெற்றி படங்களில் நடித்துவிட்டு ஓரளவு வயதான பிறகு திரைப்பட வாய்ப்புகள் இன்றி சீரியல் நடிகை ஆக களமிறங்கினார்கள். 

ஆனால் தற்போது அதற்கு மாறாக இளம் ஹீரோயின்கள் ஒரு சில சீரியல்களில் நடிகைகளாக அறிமுகமாகி அதற்குப் பிறகு மக்கள் மத்தியில் தங்களுக்கு என ஒரு இடத்தை பிடித்து விட்டு இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகை ஆக வெள்ளித்திரைக்கு சென்று அங்கே ஹீரோயினாக ஒரு இடத்தைப் பிடித்து விடுகிறார்கள்.

அந்த வகையில் முன்னேறிய நடிகைகள் பலரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அதிலும் குறிப்பாக பிரியா பவானி சங்கர், வாணி போஜன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரை கூறிக் கொண்டே செல்லலாம்.


இந்த நிலையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்றான ஆகா கல்யாணம் சீரியலின் கதாநாயகியாக நடிக்கும் அக்ஷயா தற்போது வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்துள்ளாராம்.


குறித்த சீரியலில் பவ்யமான தோற்றத்தில் ஹோமலியான கேரக்டரில் நடித்து வந்த அக்ஷயா, இல்லத்தரசிகள் இடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று நல்லதொரு அடையாளத்தையும் பெற்றுக் கொண்டார். ஒரு சிலர் இவரது நடிப்பை பாராட்டினாலும் இன்னும் சிலர் அவரது கேரக்டரை விமர்சிக்கின்றார்கள்.


இவ்வாறான நிலையில் தற்போது பிரபல இயக்குனரான பேரரசுவின் பகலறியான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளார் நடிகை அக்ஷயா. அந்தப் படத்தில் அவருக்கு கதாநாயகனாக நடிகர் வெற்றி நடிக்கின்றார். இதன் இசை வெளியீட்டு விழா அண்மையில் தான் பிரம்மாண்டமாக நடந்துள்ளது.  இந்த திரைப்படம் இன்றைய தினம் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement